Monday, May 3, 2010

அமுத நிலை

சித்தர்கள் அமுதத்தை பற்றி குறிப்பிடும்போது
அக அமுதம், புற அமுதம், அகபுற அமுதம், புற புற அமுதம்
என்று குறிப்பிடுகின்றார்கள்.
இந்த மாங்காய் பால் என்பது அக அமுதம்.
தேங்காய் பால் என்பது புற அமுதம்.
நமது உடலில் உள்ளது அனைத்தும் வெளியான அண்டத்தில் உள்ளது.

அது அகத்தில் நான்காகவும்,
அண்டத்தில் நான்காகவும்
மொத்தம் எட்டாக உள்ளது என்று வள்ளலார் கூறி இருக்கிறார்.
மேலும்
வள்ளலார் நமது உடலில் சுரக்கும் வியர்வை பிண்ட அமுதம் எனவும்
அண்டத்தில் மழை அதற்க்கு இணையான ஒரு அமுதம் எனவும் கூறி இருக்கிறார்.

இதை அறிவியல் கண்ணோட்டத்தில் எடுத்து செல்வதில் ஒரு சிக்கல் உள்ளது.
இந்த அக அமுதம் என்பது பயிற்சியின் வாயிலாக சுரப்பது.
இந்த பயிற்சி என்பது உடல் சார்ந்தது மட்டுமல்லாமல்
மனதிற்கும் பயிற்சி அளிக்கப் படுகிறது.
அதாவது மனம் அற்ற நிலையினை அடைவதற்கு பயிற்சி மேற்கொள்ளப் படுகிறது. இந்த மனமற்ற நிலையினில் அறிவு மட்டுமே விளங்கும்.

இந்த அறிவு நிலை பல படிகளை கொண்டது.
இந்த அறிவு நிலைக்கு தகுந்தார்போலவே பிரபஞ்ச ஆயுள் நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
இந்த அறிவு நிலை உயர உயர அவர்கள் கால நிலை கடந்த கலாதீதன் ஆக மாறி விடுவார்கள்.

இங்கே அவர்களுக்கு மனம் என்ற ஒன்று இல்லாத காரணத்தினால்
அவர்கள் அறிவு சுத்த அறிவிக்க இருக்கும். அதனால் அவர்கள் பயம் அற்று இருப்பார்கள்.
நாம் அறிவியல் துணை கொண்டு புற அமுதத்தை தயார் செய்ய முடியும்.
ஆனால் இதில் உள்ள பிரச்சினையே அவர்கள் மனதின் துணையுடன் பார்த்து பழகிய காரணத்தினால் அறிவின் உயர்ச்சியை புரிந்து கொள்ள முடியாமல் மன பாதிப்பிற்கு உள்ளாக கூடிய வாய்ப்பு நிறைய உள்ளது.

நாம் ஒரு சில யோகிகளை இந்த நிலையில் இன்றைக்கும் பார்க்கலாம்.
காரணம் மனதின் நிலையை சரியாக மாற்றி அமைக்காமல்
உள்ளே ஏற்படும் மாற்றங்களையும், கால நிலை மாற்றங்களையும்
இவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாததுமே ஆகும்.

ஆகவேதான்
இத படிகளாக வைத்தார்கள்.
முதலில் மனதை ஒழித்தல்
இது ஏம சித்தியிலும், சாகா கல்வியிலும் பயிலப்படும்.
அடுத்து நம்மை பற்றிய உணர்வுகளை போக்கும் பயிற்சியாக
நம்மை பற்றிய 96 தத்துவங்களையும் ஒவ்வொன்றாக விட்டு விலகுவது
இதில் மனம் முதல் இந்திரிய உணர்வு அனைத்தும் காணாமல் போய் விடும்.
அடுத்து கடவுள் நிலை அறிந்து அம்மயமாதல் என்பது
சுத்த அறிவினை பெற்று அறிவே வடிவமாக மாறுவது.
இங்கே சித்தர்கள் மாங்காய் பால் என்று சொன்னதற்கு காரணம்
மா என்றால் உயர்ந்த என்று பொருள் படும்
காய் என்றால் காயம் என்னும் உடலை குறிக்கும்.
மாங்காய் என்றால் நமது உடலில் உயரத்தில் உள்ள தலையை குறிக்கும்.
மேலிருந்து சுரக்கும் அமுதத்திற்கே மாங்காய் பால் என்று பெயர்.

அன்புடன்
நக்கினம் சிவம்.

No comments:

Post a Comment