"கள் உண்ணாமை" மற்றும் "புலால் மறுத்தல்"
அன்புள்ள சன்மார்க்க அன்பருக்கு,
திருவள்ளுவர் கள் உண்ண கூடாது என்றும் புலால் மறுக்க வேண்டும் என்று ஏன் கூறினார் ?
திருவள்ளுவ பெருந்தகை கள் உண்ணாமை என்றும், புலால் மறுத்தல் என்றும் கூறி இருப்பதன் காரணம்.
கள் என்பது பனை மரத்தில் இருந்தோ அல்லது தென்னை மரத்தில் இருந்தோ
அதன் குலைகளை சீவி அதில் வடியும் பாலை குடத்தில் பிடித்து வைத்தால்
அது புளிப்பு ஏறி போதை தரும் பொருளாக கள் ஆக மாறும்.
கள்ளை உண்ணக்கூடாது என்றதற்கு காரணம் நாம் பனை மற்றும் தென்னை மரத்தில் விளையும் பொருட்களான
நுங்கு, பணம் பழம், பனங் கிழங்கு போன்றவற்றையும் தென்னையிலிருந்து கிடைக்கும் இளநீர், தேங்காய் போன்றவற்றையும்
உணவாக உண்கிறோம். அதே போல பனை தென்னையில் இருந்து கிடைக்கும்
கள்ளையும் நாம் உண்பது தவறில்லை என்ற எண்ணம் நம் மனதில் வந்துவிடக் கூடாது
என்பதற்காகத்தான் கள் உண்ணாமை என்று கூறி உள்ளார்கள்.
கள் உண்பவர்களின் அறிவு மழுங்கி மற்ற பாவங்களை செய்வதற்கு தூண்டுகோலாய்
அமைந்து விடும் என்ற காரணத்தால் கள் உண்ணக் கூடாது என்று கூறினார்கள்.
அடுத்து புலால் மறுத்தல் என்று கூற காரணம்:
நமது உடல் புலாலாக உள்ளது. புலால் உண்பது என்பது
நமது உடலை நாமே உண்பதற்கு சமம்.
நமது உடலை நாமே சாப்பிடுவோமா ?
பிற உயிர்களை கொன்று உண்ணுவது நம்மை நாமே கொன்று உண்ணுவதற்கு சமம்.
ஆகவேதான் புலாலை மறுக்க வேண்டும் என்று கூறி உள்ளார்கள்.
மேலும் மனிதர்கள் கள் அல்லது போதை பொருட்களை உண்ணுவதற்கு
அடிப்படை காரணம் தற்காலிகமாக தன்னை மறக்க வேண்டும் என்ற எண்ணத்தினால்தான்.
அது தற்காலிகமாக மூளையை மழுங்க செய்து தான் என்கின்ற உணர்வை அதிகரிக்க செய்து
பின்னர் இல்லாமல் செய்து விடும்.
ஆக மனிதர்கள் நான் என்கின்ற உணர்வை விடுவதன் மூலம் இன்பத்தை அடைய முடியும்
என்று தெரியாமலேயே உணர்கிறார்கள். ஆனால் உண்மையில் இறைவனை உணர வேண்டும்,
இறைவனோடு கலக்கக வேண்டும் என்ற எண்ணம் கொண்டால் போதையின் மூலம் இழக்கின்ற
தற்காலிக நான் என்கின்ற உணர்வு அல்லாமல் நிரந்தரமாக நான் என்கின்ற உணர்வு போய் இறை
உணர்வாக மாறும்.
ஆகவே அன்பர்களே கள் உண்ணாதீர்கள், புலாலை மறுங்கள், இறை நாட்டத்தை கொள்ளுங்கள்.
இது போன்ற கருத்துக்களை உடைய கட்டுரையை இது
ReplyDeleteவரை நான் படித்தது இல்லை. நல்ல கருத்துக்கள்.அனைவரும்படிக்கவேண்டும். ஆர்.தமிழ்செல்வன்