Friday, December 24, 2010

உலக சமத்துவம்

அன்புள்ள சன்மார்க்க அன்பருக்கு

கடந்த நூற்று ஐம்பது ஆண்டுகளாக உலகத்தில் ஏற்பட்டுள்ள
மிக பெரிய மாற்றங்கள்

உலக ஒற்றுமைக்காக ஐ நா சபை தோற்றம்
மேலை நாடுகளின் மிக பெரிய பிரச்சனையான இன வேறுபாடு
ஒழிக்கப்பட்டு இன வேறுபாடு காண்பது குற்றமாக கருதப்பட்டு
தண்டனைக்குரிய சட்டங்கள் இயற்றப் பட்டுள்ளது.
மாமிச உணவையே பிரதானமாக உண்ணும் மக்கள் மத்தியில்
ஜீவ காருண்யம் தலை தூக்கி இருப்பது.

ஜீவ காருண்யத்தை ஆயுதமாக எடுத்த காந்தி மகான் தோன்றி
நமது இந்திய தேசத்திற்கு விடுதலை பெற்று தந்தது.

மேலும்
நமது தேசத்தில் வருணாசிரமம் என்கின்ற
ஒரு காட்டு மிராண்டி தனமான எழுதாத சட்டம்
ஒரு பிரிவினர் உயர்ந்த வகுப்பாகவும்,
அவர்களுக்கு உதவும் வகுப்பினர் அவர்களை விட சிறிது தாழ்ந்தவர்களாகவும்
அடுத்து போர்குணம் கொண்ட வகுப்பினர் அவர்களை விட
தாழ்ந்த மக்களாகவும்
பொருளாத ரீதியில் மிகவும் பின் தங்கியவர்களை
மிகவும் தாழ்ந்த மனிதர்களாகவும்
நடத்தப்பட்டு மனிதர்களிடையே பிரிவினையும்
பேதமும் காண்கின்ற நிலை
பல்லாயிரம் ஆண்டுகளாக நிலவி வந்தது இன்று எங்கே ஓடி போனது.
இவை அனைத்தும் வள்ளல் பெருமானார் வருகைக்கு பிறகு
ஏற்பட்டதுதான்.

முதலில் சன்மார்க்க அடிப்படை என்ன என்றால்
உயிர்களிடம் உள்ள பேதம் நீங்கி அனைவரையும்
சகோதரர்களாக காண்கின்ற பக்குவத்தை பெறுவதுதான்.
உண்மையில் இன்றைய உலகில்
95 சதவீதம் மக்கள் நல்லவர்களாக 5 சதவீதம் தீயவர்களாகவும்
இருக்கின்றார்கள்.

அப்படி இல்லாமல் இருக்குமேயானால்
உலகம் இன்றைக்கு அமைதி பெற்று இருக்காது.
உலகில் தோன்றிய மதங்கள், சமயங்கள் எல்லாம்
காலம் காலமாக தீமையிலிருந்து மனிதர்களை
மீட்பதற்காக பாடுபட்டன. ஆனால் அவற்றில் சமத்துவம்
முழுவதுமாக இல்லாத காரணத்தினால்
மனிதர்களை திருத்துவதற்காக
இறைவனால் வள்ளல் பெருமான் வருவிக்க உற்றார்.
அவர் இன்றும் சூக்கும தேகத்தின் மூலம்
உலகை வழி நடத்தி வருகிறார்.

ஆகவே கூடிய விரைவில் உலகம் முழுமையாக
சமத்துவம் நிறைந்ததாக மாறும் என்பதில் ஐயமில்லை.

2 comments:

  1. 'மனிதர்களை திருத்துவதற்காக
    இறைவனால் வள்ளல் பெருமான் வருவிக்க உற்றார்' என சொல்லி ஏன் அய்யா பயமுறுத்துகிறீர்கள். வள்ளலாரை தவிர எண்ணிறைந்த கோடி உயிர்களையும் உங்க கடவுள் தானே வருவிக்க உற்றார். அந்த உயிர்கள் எல்லாம் திருந்தவில்லையே! - கடவுள் எனும் ஒன்று இல்லை. அப்படி இருக்கிறது என்றால் அது 'அருட்பெரும்ஜோதி'யேயாகும் என்றுதான் சொல்லியிருக்கிறார். நீங்கள் சொல்வது வள்ளலாரின் கருத்துக்கு மாறுபட்டதாகும்.

    ReplyDelete
  2. உங்கள் புரிதல் இவ்வளவுதானா ?
    கடவுள் எனும் ஒன்று இல்லை என்று வள்ளல் பெருமான் எங்கு கூறியிருக்கிறார் ?
    திருவருட்பாவை தொட்டாவது இருக்கிறீர்களா ?
    பயமுறுத்துவது நானல்ல - நீங்கள்தான்.

    ReplyDelete