உண்மை பரம் பொருள் ஒன்றே அதை அதனால் உணர வேண்டும். உணர்ந்த பின் அது வேறு நாம் வேறு அல்ல. இரண்டு ஒன்றாகும் போது ஒன்றைக் காண ஒன்று இல்லையே.
Wednesday, December 31, 2014
வைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் திறப்பது - எது ?
வைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் திறப்பது - எது ?
அன்பு சகோதரர்களே,
இன்றைக்கு ஆங்கில புத்தாண்டு தினம் நல வாழ்த்துக்கள்.
இன்றைக்கு மேலும் ஒரு சிறப்பு. அது இன்று வைகுண்ட ஏகாதசி. இன்றைக்கு வைணவ கோவில்களில்
சொர்க்க வாசல் எனும் பரம பத வாசல் திறக்க படும் நாள்.
உண்மையில் இதன் உண்மை பொருள் எந்ந என்றால்
ஏகாதசி என்பது நம்முள்ளே இயங்கும் தச வாயுக்கள் பத்து வாயுக்கள் சுழுமுனையில் ஒருமை பெறுவதே ஏகாதசி எனப்படும்.
அந்த சுழு முனை நாடியை குண்டம் என்னும் அக்னி கலையில் வைக்கின்ற நிகழ்வே வைகுண்ட ஏகாதசி எனப்படும்.
அடுத்து சொர்க்க வாசல் என்னும் பரம பத வாசல் திறப்பு என்னும் நிகழ்வு
நமது உடலில் ஒன்பது துவாரங்கள் உள்ளன ஆனால் பத்தாவதாக ஒரு துவாரம் பிறக்கும் பொது
அடைத்து வைக்கப்பட்டு பிறக்கின்றோம். அந்த பத்தாவது வாசலே பரமனாகிய இறைவனை காண்பதற்கும்,
அடைவதற்கும் உண்டான வாசல்.அந்த வாசலை திறந்தால் அதுவே சொர்க்க வாசல்
அதாவது இறையுடன் அறிவதற்கு, ஒன்றுவதற்கு உள்ள வாசல். அதுவே புருவ மத்தி
என்னும் திருவடியை அடைவதற்கான வாசல். அந்த வாசலை திறந்து இறையோடு ஒன்றுவதற்கு
ஏற்ற தினமாக தச வாயுக்களும் ஒடுங்கி சுழுமுனையில் வாசல் திறப்பதே
வைகுண்ட ஏகாதசியில் பரம பத வாசல் திறப்பு என்னும் சடங்காக ஏற்படுத்தப்பட்டது.
இதில் ஒருவராவது இந்த சடங்கின் உண்மை பொருளை உணர வேண்டும் என்ற நோக்கில்
இது உருவாக்கப்பட்டது. ஆனால் சடங்குக்கு முக்கியத்துவம் அளிக்கும் மனிதர்கள்.
உண்மை ஞானம் பெற முயல்வதில்லை. இனியாவது முயல வேண்டும்.
நன்று.
Subscribe to:
Post Comments (Atom)
அருமையான பதிவு.
ReplyDeleteமிகவும் நன்று ...
Tamil News | Tamil Newspaper | Latest Tamil News | Kollywood News
அருமையான பதிவு
ReplyDeleteThank you for your definition
Arul perum jothi Arul perum jothi thani perum karunai
ReplyDelete