Tuesday, April 6, 2010

நான் யார் விளக்கம்

நான் யார் விளக்கம்

அன்புள்ள சன்மார்க்க அன்பருக்கு

நமது புராணங்களில், ஞான நூல்களில், சித்தர் இலக்கியங்களில், அற நூல்களில்,
நான் யார் என்ற கேள்விக்கு விளக்கங்கள் பலவாக சித்தரிக்கப் பட்டிருக்கிறது.
அதில் நமது ஆன்மாவே நான் என்றும், நமது ஜீவனே நாம் என்றும்,
வுடலோடு கூடிய ஜீவனே நான் என்றும் பலவாறாக கூறப்பட்டிருக்கிறது.
ஆனால் நமது வள்ளல் பெருமானார் மற்றும் சித்தர்களும்
ஜீவனும் சிவமும் ஒன்றாக கலப்பதற்கு முன்பு
விளங்கும் நிலையினை அதாவது நாம் வுலகில் வுடல் வுணர்வு,
மன வுணர்வு, அறியும் வுணர்வு ஆகிய வுனர்வுடன் கூடிய வுனர்வையே
நான் என்று கூறுகிறார்கள்.

வுனர்வுறு வுணர்வும் வுனர்வெலாம் கடந்த
அனுபவாதீதமாம் அருட்பெரும்ஜோதி

என்று நமது வள்ளல் பெருமான் கூறியிருப்பதிலிருந்து
நான் என்பது வுனர்வாகவே இருக்கிறது.
அந்த நான் என்கின்றன வுணர்வு கடந்து ஜீவனும் ஆன்மாவும்
கலக்கும் ஜீவ ஐக்கியமே சிவா நிலை அடைதலாம்.
ஆக நான் என்பது வெறும் வுணர்வு மட்டுமே.
ஆதியில் சிவம் இயக்கமற்று நிலை கொண்டு இருந்த போது
சக்தி என்னும் இயக்கம் சலனமாக தோன்றியது.
சலனத்தின் விளைவாக ஒன்று என்ற நிலை மாறி
இரண்டு என்கின்ற நிலையின் காரணமாக ஆன்மா ஜீவன்
என்கின்ற இரு நிலை தோன்றியது. ஜீவன் நான் என்கின்ற
வுணர்வு பெற்றபோது இந்த வுலகம் தோன்றியது.
அதன் பின் ஜீவன் செயலாற்ற தொடங்கியதும் வினை தோன்றியது.
அது நல் வினை என்றும் தீ வினை என்றும் இரண்டாக பிறப்பிற்கு மூலமாய் அமைந்தது.
ஆக நாம் நான் என்கின்ற வுணர்வை விடுத்து ஒருமை நிலையை அதாவது
சிவ நிலையை அடைவதின் மூலமாய் பிறப்பிலிருந்து விடுபடலாம்.
ஆக நான் என்பது வுணர்வு மட்டுமே என்பதை நாம் அறியலாம்.

அன்புடன்

விழித்திரு ஆறுமுக அரசு

No comments:

Post a Comment