Tuesday, April 6, 2010

இந்த உலகில் நான் பெரிய பணக்காரன்

அன்புள்ள சன்மார்க்க அன்பருக்கு,

நாம் வாழுகின்ற இந்த பூமி
அண்டத்தில் உள்ள பால் வெளியில் - பிரபஞ்சத்தில்
ஒரு சிறிய புள்ளி அளவே உள்ளது.
அப்படிப்பட்ட புள்ளி அளவுள்ள பூமியில் உலகின் பணக்காரர் என்று
சொல்லிக்கொல்பவரின் சொத்துக்கள் கண்ணுக்கு தெரியாத அணு அளவே உள்ளது.
இந்த நாட்டை ஆள்கிறேன் என்று சொல்பவரின் எல்லை
கண்ணுக்கு தெரியாத சிறிய அளவே உள்ளது.

எனக்கு பத்து வீடுகள், பெரிய பண்ணை நிலம் உள்ளது என்று
சொல்பவர்களின் சொத்துக்கள் எல்லாம் இந்த பிரபஞ்சத்தில்
கண்ணுக்கு தெரியாத அளவே உள்ளது.
இறைவனின் படைப்பில் நமது பூமி மிக சிறியது.
அப்படிப்பட்ட பூமியில் நமக்கு சொந்தமான சொத்துக்கள்
வீடு, நிலம், கார், பைக், போன்ற அனைத்துமே
பிரபஞ்சத்தை அளவிடும்போது கண்ணுக்கு தெரியாத
ஒரு சிற்றணு வடிவாகவே உள்ளது.

ஆனால் நாம்
இந்த உலகில் நான் பெரிய பணக்காரன்,
இந்த நாட்டில் நான் பெரிய பணக்காரன்
இந்த மாநிலத்தில் பெரிய வசதியானவன்
இந்த ஊரில் நான்தான் மிக உயர்ந்தவன்
எங்கள் தெருவிலேயே நான் தான் வசதி படைத்தவன்
என்னுடைய சொந்தகாரர்களிலேயே நான்தான் பணக்காரன்
என்னுடைய நண்பர்களிலேயே நான்தான் வசதியான பொருட்களை
வைத்திருக்கிறேன். என்னிடம் இருக்கும் பொருள் யாரிடமும் இல்லை.
என்று நான் என்கின்ற அகங்காரத்தின் காரணமாக பெருமை படுகின்றோம்.

ஆனால் நாம் வாழும் இந்த பூமி பிரபஞ்சத்தில் ஒரு சிறிய புள்ளி அளவே.
அப்படிப்பட்ட புள்ளியில் நாம் கண்ணுக்கு தெரியாத சிற்றனுவாக உள்ளோம்.
இது எப்படி இருக்கிறது என்றால்
நமது உடம்பில் உள்ள அணுக்கள் ஒவ்வொன்றும்
நான்தான் பெரியவன் நான்தான் பெரியவன் என்று
கூறிக்கொண்டு இந்த பகுதியை நான் ஆட்சி செய்கிறேன் என்று
கூறிக் கொண்டு வாழ்ந்து கொண்டிருந்தால்.அதை நாம் அறிந்தால்
நமக்கு எப்படி சிரிப்பு வருமோ.

அதுபோல மனிதர்களாகிய நமது செயல்கள் (அகங்காரங்கள்)
இறைவனுக்கு சிரிப்பைதான் வரவழைக்கும்.

ஆகவே நமது சிறுமையை நினைத்தால்
இறைவனின் பெருமையை நினைத்தால்
நமக்கு நான் என்கின்ற அகங்காரம் தானே ஒழியும்.

ஆகவே நம்மிடம் இருக்கும் பொருட்களில்
நமக்கு போக உள்ளவற்றை மற்றவர்களுக்கு கொடுத்து
அனைவரையும் சந்தோஷபடுத்தி
நாமும் சந்தோஷமாக வாழ்வோம்.

அன்புடன்

விழித்திரு ஆறுமுக அரசு

No comments:

Post a Comment