சமணமும் புத்தமும் உயர்ந்த கொள்கைகளை கொண்டு உள்ளன.
ஜீவ காருண்யம் வலியுறுத்தப் படுகின்றன.
காரணம் உண்மையை தேடும் நிலையில்
இந்த உலகில் உள்ள உயிர்கள் அனைத்தும் சகோதரர்களாக தெரிவதனால்
எல்லா உயிர்களிடமும் அன்பு தோன்றும்.
இருப்பினும் ஆழ்ந்த தியானத்தில் உண்மையை தேடும் போது
ஒரு நிலையில் அனைத்தும் ஒன்றும் இல்லை
என்னும் உணர்வு தோன்றும்.
இந்த நிலையினை அடைந்தவர்கள்
புத்தரும், மகா வீரரும்.
அதாவது புத்தரின் சூன்ய வாதம்
ஒன்றும் அற்ற சூன்யத்தை பேசுகிறது.
( புத்தரின் சூன்ய வாதத்தை கேலி செய்வதற்கு
இந்து மதத்தை சேர்ந்தவர்கள் ஞான சூனியம் என்று
ஒன்றும் தெரியாதவன் என்ற பொருளில் பயன்படுத்தினர்)
அதாவது புத்தரின் ஞானம் என்பது சூன்யமே உண்மை என்பதாகும்.
மனம் விடுபட்டு ஒன்றும் அற்ற நிலை பெற்றதாகும்.
ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி (ஜே கே ) அவர்களின்
அறிந்ததில் இருந்து விடுதலை என்பதும் கூட இதுதான்.
ஆனால் சன்மார்க்கத்தில்
மனம் அற்ற நிலையில் இது போன்ற சூன்ய நிலையினை தாண்டி
இறை நிலை நோக்கி செல்வதனால்.இறைவனின் தரிசனம் வாய்க்கிறது.
இங்கே கடவுள் நிலையினை அறிந்ததனால்
அடுத்து அம்மயமாதல் நடைபெறுகிறது.
ஆக சூன்ய நிலை தாண்டிய இறை நிலையை சன்மார்க்கம் போதிக்கிறது.
No comments:
Post a Comment