இறைவன் போட்ட முடிச்சு
வானம் தொட்டுவிடும் தூரம்தான் என்றும்
வானமே எல்லை என்றும் நம்மில் பலர்
வானத்தை பற்றி கூறி வருகிறார்கள்.
இவர்கள் ஒரு உண்மையை புரிந்து கொள்ளாமல்
வானம் எதோ நம்மை விட்டு விலகி வெகு தூரத்தில்
இருப்பது போன்று கூறுகிறார்கள்.
உண்மையில் வானம் நம்மை விட்டு வெகு தொலைவில் இருக்கிறதா ?
இல்லை என்பதுதான் உண்மை.
நாம் இருப்பதே வானத்தில்தானே.
வானத்தில் இருக்கும் பூமியில் வானத்தை ஒவ்வொரு வினாடியும் நாம்
தொட்டுக் கொண்டுதான் வாழுகிறோம்.
அதே போல நமது உடலில் இருக்கும் வெற்றிடங்கள் அனைத்துமே
வானம் தான் என்பதை நாம் உணர மறுக்கிறோம்.
மேலும்
ஒவ்வொரு அணுவினுள்ளும் இருக்கின்ற வெற்றிடம் அனைத்துமே
வானம் என்பதை நாம் எண்ணுவதில்லை.
அடுத்து
வானம் எனக்கு மேலே இருக்கிறது என்று
நமது தலைக்கு மேலே காண்பிக்கிறோம்.
நமது தலைக்கு மேலே இருப்பது மேல் பகுதி என்று
நாம் எவ்வாறு முடிவு செய்ய முடியும் ?
நமது பூமி வானத்தின் மேல் பகுதியில் உள்ளதா ?
அல்லது வானத்தின் கீழ் பகுதியில் உள்ளதா ?
யார் அறிவார்கள்.
நமது தலைக்கு மேலுள்ளது மேல் பகுதியா ?
அல்லது கீழ் பகுதியா ?
நாம் நேரே நிற்கிறோமா ?
அல்லது
புவி ஈர்ப்பு விசையின் காரணமாக
தலை கீழாக தொங்குகிறோமா ?
நாம் அறிவோமா ?
ஆக மேல் எது கீழ் எது என்று தெரியாத நாம்
மேலான இறைவனின் முடிச்சை அறிய முடியுமா ?
அடுத்து சிந்திப்போம்.
அன்புடன்
நக்கினம் சிவம்
No comments:
Post a Comment