ஒன்றான சிவம் அசைவற்ற நிலையில் உலகம் என்ற ஒன்று இல்லை.
அதன் அசைவின் பயனாய் சக்தி என்ற ஒன்று தோன்றியது.
அதுவே ஆன்மா. அசைவின் காரணமாய் அது சுத்த மாயை வயப்பட்டது.
நமது
மனதை ஜீவனிலும்,
ஜீவனை ஆன்மாவிலும்,
ஆன்மாவை சிவத்திலும்
சேர்க்கின்ற ஜீவ ஐக்கியத்தை
காலம் காலமாக சமாதி நிலை என்று நமது பெரியவர்கள் வழங்கி வருகிறார்கள்.
சமாதி என்பது மனம், அறிவு, ஜீவன், ஆன்மா ஆகிய எதுவும் இயங்காமல் சிவத்துடன் கலந்த நிலை ஆகும்.
இதைதான் சித்தர்களும் ஞானிகளும் பக்குவப்பட்ட ஜீவர்களுக்கு போதித்து வந்தார்கள்.
ஆக இந்த இயக்கமற்ற நிலைக்கு செல்ல வல்லவர் முக்தி நிலை பெற்றவர்.
இதற்க்கு மேலான நிலை பக்குவப்பட்ட ஜீவர்களுக்கும், விட்ட குறை உள்ளவர்களுக்கும் விளங்கும்.
No comments:
Post a Comment