Monday, July 26, 2010

உண்மையை உணர அக ஆய்வு

அன்பு நண்பர்களே,

நான் சிறிய வயதாக இருக்கும் போது பள்ளியில் நண்பர்களுக்குள்
இரண்டு பிரிவு இருக்கும்
சிவாஜி கட்சி - எம்.ஜி.ஆர். கட்சி.
எங்களுக்குள் சிவாஜி கட்சி என்று ஒரு கூட்டமும்.
எம்.ஜி.ஆர். கட்சி என்று ஒரு கூட்டமும்
சண்டை போட்டுக் கொள்வோம்.
சிவாஜிதான் நல்லவர் நல்லா நடிப்பார் என்றும்
இல்லை
எம்.ஜி.ஆர். தான் நல்லவர் அவர்தான் நல்லா நடிப்பார் என்றும்
வாய்ப்பேச்சு முற்றி அடித்து கொள்ளும் அளவிற்கெல்லாம்
பள்ளி நாட்களில் நடைபெற்றன.
அதை இப்போது நினைத்தாலும் சிரிப்புதான் வருகிறது.
காரணம்
நாங்கள் சிறு வயதாக இருக்கும்போது
எங்களில் யாரும் எம்.ஜி.ஆர். ஐயோ சிவாஜி ஐயோ நேரில் பார்த்தது கூட கிடையாது. இருப்பினும்
எங்களுக்கு எம்.ஜி.ஆர். - சிவாஜி எப்படி பிடித்தது என்று பார்த்தால்
ஒன்று எங்களுடைய அப்பா, அம்மா, அண்ணன், அக்காள் அல்லது நண்பன் யாருக்காவது பிடித்து அவர்கள் சொல்லி அது நமது மூளையிலும் பதிவாகி அவர்களை நமக்கும் பிடித்து போனதனால்
அவர்களுக்காக நாம் பரிந்து பேசி மற்றவர்களிடம் சண்டைக்கு போகும் அளவிற்கு நாம் மாறி போயிருக்கிறோம்.
இது சிறு வயதில் நடந்ததாக இருந்தாலும்
இதில் இருந்து நாம் ஒரு பாடத்தை கற்றுகொண்டிருக்கிறோம்.
அதாவது நாம் நமக்கு பிரியமானவர்களாக அறிந்து அனுபவித்து
பழகி தேர்ந்தெடுப்பது ஒரு வகை.
மற்றொன்று
மற்றவர்கள் சொல்லி, மற்றவர்களை பார்த்து நாம் ஒரு சிலரை பிரியமானவர்களாக கொள்கிறோம்.
அதுபோல்தான்
நாம் இறைவனையும் நமது தாய் சொன்னார், தந்தை சொன்னார்
உறவினர்கள் சொன்னார்கள் என்று ஒரு சமயத்தை சார்ந்து அந்த சமயம் எனது சமயம் என்றும், அந்த சமயமே உயர்ந்தது என்றும் நினைத்து இருக்கிறோம்.
ஆனால் உணர்ந்து அனுபவித்து ஞான நிலையினை புரிந்து எத்தனை பேர் ஒரு சமய்த்த்தில் ஈடுபாடு கொள்கின்றாகள் என்றால் ?
மிக சிலரே என்பதே பதிலாக இருக்கும்.
எம்.ஜி.ஆர். கட்சி - சிவாஜி கட்சி என்று
சிறு வயதில் போட்ட சண்டையை போலதான்
நாம் கொண்டுள்ள நம்பிக்கையில் நாம் ஈடுபடுகின்ற
வாதங்களும் இருக்கின்றன.
உண்மையில் உண்மையை அக ஆய்வு செய்தால்
நாம் செய்கின்ற வாதங்கள் நமக்கே சிரிப்பைதான் வரவழைக்கும்.

மேலும்
ஞானத்தில் தெளிவு பெற்றவர்கள்
அகத்தில் ஆய்வு செய்து
புறத்தில் பாடல்களாக எழுத்துக்களாக
வடித்து சென்ன்று இருக்கிறார்கள்.
ஆனால் நாம்
புறத்தில் அவர்கள் எழுதி சென்றதை
புறத்திலேயே ஆய்வு செய்து
நம் சிற்றறிவின் துணை கொண்டு
புறத்திலேயே எழுதுகிறோம்.
புறத்தில் உள்ள எழுத்துக்களை
அகத்தில் ஆய்வு செய்தால் மட்டுமே
புறத்தில் எழுதப் பட்ட கருத்துக்களின்
உண்மை புலப்படும்.
ஆனால் ஞானிகளால்
புறத்தில் எழுதப்பாட்ட எழுத்துக்களை
புறத்திலேயே ஆய்வு செய்வதனால்
நம் அறிவுக்கு என்ன புலப்பட்டதோ அதுவே
உண்மை என்று நாம் எண்ணுகின்றோம்.
ஆகவேதான்
அகத்தில் ஆய்வு செய்வோருக்கும்
புறத்தில் ஆய்வு செய்வோருக்கும்
கருத்து வேறுபாடு வருகிறது.

நாம் உண்மையை உணர அக ஆய்வு செய்வோம்.

அன்புடன்
நக்கினம் சிவம்

No comments:

Post a Comment