கடவுள் தோற்றப் பொருளா ?
குரங்குகளுக்கு தங்களுடைய கடவுள்
குரங்கு போன்ற உருவத்தில்தான் இருப்பார்.
மாடுகளுக்கு தங்களுடைய கடவுள்
மாடு போன்ற உருவத்தில்தான் இருப்பார்.
ஆடுகளுக்கு தங்களுடைய கடவுள்
ஆடு போன்ற உருவத்தில்தான் இருப்பார்.
எறும்புகளுக்கு தங்களுடைய கடவுள்
எறும்பு போன்ற உருவத்தில்தான் இருப்பார்.
புழுக்களுக்கு தங்களுடைய கடவுள்
புழு போன்ற உருவத்தில்தான் இருப்பார்.
அதே போல அறிவில் உயர்ந்தவர்கள் என்று
தங்களைநினைத்துக் கொண்டிருக்கும்
மனிதர்களும் தங்களுடைய கடவுள்
மனிதன் போன்ற உருவத்தில்தான் இருப்பதாக
நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
தினம் தினம் செத்துக் கொண்டிருக்கும் மனிதர்களை
பார்த்துக்கொண்டிருக்கும் மனிதர்கள்
என்றும் அழியாத கடவுள்
நம்மைப்போல அழியும் உடலுடன் இருப்பாரா ?
என்று சிந்திப்பது இல்லை.
கடவுளுக்கு நம்மை போலவே கல்யாணம்
கடவுளுக்கு நம்மை போலவே குழந்தைகள்
கடவுளுக்கு நம்மை போலவே ஆசா பாசங்கள்
கடவுளுக்கு நம்மை போலவே கோபம், ஆணவம்
கடவுளுக்கு நம்மை போலவே எதிரி, நண்பன்
கடவுளுக்கு நம்மை போலவே உணவு படைத்தல்
கடவுளுக்கு நம்மை போலவே கை கால்கள், உடல், உறுப்புகள்.
கடவுள் எதிரியுடன் சண்டை போட்டு உலகத்தை காப்பாற்றுகிறார்.
அந்த எதிரியை யார் படைத்தது ?
எதிரியையும் அவரே படைத்தார் என்றால்
ஏன் படைத்து விட்டு அவரே அழிக்க வேண்டும்.
அல்லது மனிதர்கள் நினைத்துள்ள மனித கடவுளை விட
மேலான கடவுள் உள்ளாரா ?
அப்படியெனில் அந்த மேலான கடவுள் யார் ?
அவரின் செயல்தான் என்ன ?
அவரின் ருபம்தான் என்ன ?
நாம் நினைத்திருக்கும் மனித சொருப கடவுள்
எதிரிகளை அழிக்க மனித உரு கொண்டு
அழிக்க வருகிறார் என்றால்
அவருடைய ஆற்றல் மிக குறைந்த அளவே உள்ளது
என்பது தெரிகிறதே அப்படி இருக்கும் போது
நாம் ஏன் அந்த ஆற்றல் குறைந்த கடவுளை வணங்க வேண்டும்.
இவர்களை போன்ற ஆற்றல் குறைந்த கடவுள்களை படைக்கும்
கடவுளை நேரடியாக வணங்கலாமே.
அப்படிப்பட்ட மேலான உண்மையை புரிந்து கொண்டு
கீழான ஆற்றல்களை பெற்ற கடவுள்களின்
உருவங்களை வழிபடுவதை விடுத்து
உண்மை இறையின் நிலையை உணர
அக ஆய்வு செய்து உண்மையை
உணர்ந்து உண்மை வழிபாடு செய்வதுதான்
மனிதர்கள் தங்களை அறிவில் மேம்பட்டவர்கள்
என்று கூறிக் கொள்வது பொருத்தமாக இருக்கும்.
அன்புடன்
சிவம்
No comments:
Post a Comment