அன்புள்ள சன்மார்க்க அன்பருக்கு,
உலகில் முதல் முதல் ஜீவகாருண்யம் போதித்த சமயம்
சமண சமயம் ஆகும். அப்படிப்பட்ட சமயம் இன்றைக்கு
மிகவும் சிறுபான்மை மக்களாலேயே கடைபிடிக்கப் பட்டு வருகிறது.
அதுவும் அதன் கொள்கைகளை உண்மையில் கடைபிடிப்பவர்கள்
ஒருவர் இருவர் என விரல் விட்டு எண்ணக் கூடிய அளவிலேயே உள்ளது.
உயர்ந்த கொள்கையை கொண்ட ஒரு சமயம் காலபோக்கில்
மக்களால் புறக்கணிக்கப் பட்டதற்கு காரணம் யாது ?
அதன் கொள்கைகள் அந்த சமயத்தை சேர்ந்தவர்களால்
தவறாக புரிந்து கொள்ளப்பட்டதும்,
உண்மை கொள்கைகள் சடங்குகளாக மாறி போனதும்தான்.
இந்த சமயத்தை தோற்றுவித்த மகாவீரர்
(இவரை தீர்த்தங்கரர் என்று இந்த சமயத்தவர் அழைக்கிறார்கள்)
கொல்லா நெறியை உலகுக்கு போதித்தார்.
இவரது பெயரே
யார் ஒருவர் எந்த ஜீவனுக்கும் தீங்கு விளைவிக்காமல்
இருக்கிறாரோ அவரே மகா வீரர் என்று எடுத்தியம்புவதாக
உள்ளது. (மற்ற உயிர்களை கொன்று யுத்தத்தினால் நாட்டினை
பிடித்து ஆட்சி செய்பவர்கள் வீரர்கள் அல்ல)
இந்த சமயத்தில் நிர்வாண நிலை என்று
ஒரு ஞான நிலை உள்ளது
நிர்வாணம் என்றால்
அனைத்து பற்றுகளையும் துறந்த நிலை என்று பொருள்
அதாவது மனதில் நிர்வாணம், உலக பற்றுகளில் நிர்வாணம்,
பந்த பாசங்களில் இருந்து நிர்வாணம்
பால் உணர்விலிருந்து நிர்வாணம்
என அனைத்து செயல்கள்
அனைத்து உணர்வுகள்
எல்லாவற்றையும் விட்டு விலகி ஞான நிலையினை
அடைந்த நிலையாகும்.
ஆனால் சமண சமயத்தை சேர்ந்த ஒரு பிரிவினர்
இதை தவறாக புரிந்து கொண்டு நிர்வாணம் என்றால்
உடலில் துணி இல்லாமல் நிர்வாணமாக இருப்பது
என்று நிர்வாணமாக திரிகிறார்கள்.
மேலும் இந்த சமயத்தில் பிற்காலத்தில் நிறைய சடங்குகள்
மந்திர தந்திரங்கள், உருவ வழிபாடுகள் என அனைத்தும்
புகுந்து கொண்டதனால் பெரும்பான்மை மக்களால்
இந்த சமயம் புறக்கணிக்கப்பட்டது.
ஆகவே நமது சன்மார்க்கத்தில்
எந்த சடங்குகளையும் புகுத்தாமல்
சன்மார்கத்தின் உண்மையை அனைவருக்கும் எடுத்து கூறி
அனைவரையும் சன்மார்க்கத்தை கடைபிடிக்க வைப்போம்.
அன்புடன்
விழித்திரு ஆறுமுக அரசு
No comments:
Post a Comment