உருவ வழிபாடு அனைத்தும் கடவுளை மனித தரத்தில் சித்தரிக்கப்பட்டவை மட்டுமே.
கடவுள் என்பவர் ஆசா பாசங்களை கடந்தவர் என்னும்போது
அவரை வணங்கினால் மட்டுமே அவர் காப்பாற்றுவார் என்பதும்,
அவரது அடிமையாக அனைவரும் இருக்க வேண்டும் என்பது போல
நம்மை பழக்கப்படுத்தி வைத்திருக்கிறார்கள்.
கடவுள் என்று கூறிககொள்ளும் ஒருவர் அவரை யார் விரும்புகிறார்கள்
என்று கேட்பது கடவுள் நிலையாக தெரிகிறதா ?
சிவனுக்கு பார்வதி என்று மனைவி ?
விஷ்னுவுக்கு மகாலட்சுமி என்று மனைவி ?
பிரம்மாவிற்கு சரஸ்வதி என்று மனைவி ?
உண்மை பரம்பொருள் ஆண் என்றும் பெண் என்றும்
பேதம் கொண்டு இருப்பார்களா ?
நமக்குதான் ஆண் பெண் பேதம் எல்லாம்
இறைவனுக்குமா ?
இறைவன் இப்படி இருப்பார் அப்படி இருப்பார் என்று
நமது முதாதையர் செய்து வைத்த முளைச் சலவை என்று புரியவில்லையா ?
ராமாயணத்தின் உண்மை பொருள் என்ன என்று புரியாமல்
மகாபாரதத்தின் உண்மை பொருள் என்ன என்று புரியாமல்
தசாவதாரம் என்ன என்று புரியாமல்
இறைவனையும் சிறுபிள்ளை விளையாட்டாக நாம் நினைத்து
வழிபாடு செய்வது புரியவில்லையா ?
சிவனுக்கு முக்கண் என்பது என்ன என்று புரியாமல்
சிவனின் உடலில் பாதி பார்வதி என்பது என்ன என்று புரியாமல்
விநாயகர் என்று ஒரு கடவுள் யார் என்று புரியாமல்
முருகன் என்று ஒரு கடவுள் யார் என்று புரியாமல்
இவர்கள் பெயரில் உருவங்களை வைத்து
அந்த உருவங்களை வழிபாடு செய்தால் நன்மை பெறலாம்
என்று ஒரு கற்பனையை ஏற்படுத்தி
இறைவன் என்பவனும் புகழுக்கு மயங்குபவன் என்றும்
அவனை
அவரே வாழ்க, இவரே வாழ்க என்று புகழ்ந்தால் அவர்
நமக்கு பல நன்மைகள் செய்வார் என்பது
அவரும் மனிதரை போன்றவர்தான்
என்பது போலதானே உள்ளது ?
இறைவன் என்பவன் இதை அனைத்தையும் கடந்தவன்
என்பது உங்களுக்கு விளங்கவில்லையா ?
நாம் கொண்டுள்ள நம்பிக்கை என்பது நமது முன்னோர்களால்
அளிக்கப்பட்ட்து. அதில் உள்ள உட்பொருளை புரிந்து கொள்ளாமல்
கதையை கதையாகவே நாம் பார்த்து பழகி விட்டோம்.
ஆகவேதான் அதிலிருந்து விடுபடுவதற்கு தயங்குகின்றோம்.
சிந்தனை மேலும் தொடரும்.
அய்யா , தங்களது "ஞானத தெளிவு " படைப்பு மிகவும் அருமை மனமார்ந்த வாழ்த்துக்கள் !! ,
ReplyDeleteநீங்கள் கூரியது முற்றிலும் உண்மை , இறைவன் என்பவன் மனிதனுடைய கற்பனைக்கு அப்பாற்பட்டவன் , ஞானம் (தன்னை அறிதல் ) மிகப்பெரிய விஷயம் , என்றும் அதற்கு குரு , தியானம் , துறவறம் , மனதை ஒருமுகபடுதல் , மந்திரம் இவை அனைத்தும் மிகவும் அவசியம் என்ற நம் மக்களின் தவறான எண்ணமே காரணம் , மேலும் ஞானம் அடைய நீண்ட காலம் ஆகும் , நமது வாழ்கையே அர்பணிக்க வேண்டும் என்று நினைகின்றனர் ..,
ஆனால் மேற்குரியவை அனைத்தும் சமாதி நிலையை அடைவதற் காணவ்யே , ஞானம் பெற கண் சிம்மிட்டும் நேரம் குடதேவையிலை , விஞ்ஞானதிலிறிந்து கூட ஞானம் பெறலாம் " நினைத்து பாருங்கள் பூமியின் பரபளவு (510,066,000 sq km) , பூமியை விட 109 மடங்கு பெரியது சூரியன் , சுரியனை விட பல பல மடங்கு பெரியது நட்சத்திரம் , எவ்வுளவு நட்சத்திரங்கள் என்று இனும் கனக்கு போட முடியவில்லை . நம் பூமியை போலவே பல ஆயிரம் கிரகங்களும் , சூரியன்களும்; பால் வெளியில் உள்ளன .., பல கோடி ஒழி ஆண்டுகள் கடந்து இன்னும் ., பிரபஞ்சத்தின் அளவு கோள் நீள்கிறது என்கிறது விஞ்ஞானம் " நினைத்து பாருங்கள் இவ்வுளவு பெரிய பிரபஞ்சத்தில் .. ஒரு புள்ளி கூட இல்லை நமது பூமி அதில் ஒரு முலையில் நாம் நம்மை பாதுகாக்க பெற்றோர் நண்பர்கள் , உறவினர்கள் ., குடும்பத்திற்கு வீடு , நமது வீட்டை பாதுகாக்க நாய் , தெருவை பாதுகாக்க சங்கம் , காவல் , நமது மாநிலத்தை பாதுகாக முதலமைச்சர் என்னையே அமைச்சர்கள் , நாடுக்கு பிரதமர் , அப்பப்பபா !!!!!!!!!!!!!!!!! தலையே சுற்றுகிறது ..,இதை படிக்கும் போது வாழ்கையே ஒன்றும் இல்லை என்று ஒரு எண்ணம் வரும் அந்த என்னத்தை மனதில் நிறுத்த வேண்டும் ., திரும்ப திரும்ப நினைக்க வேண்டும் , நினைத்து கொண்டே சித்தர்களின் நூல்கள படிக்க வேண்டும் ., அப்பொழுது தான் ஆன்மாவின் சுட்சுமம் விளக்கும் . மனம் வெறுக்கும் ., அப்பொழுது மனம் வெற்றிடம் ஆகும் . அந்த வெற்றிடத்தில் ஆன்மாவின் ஜோதி பிரகாசிக்கும் .., சமாதி நிலை தானக் அமையும் ..,
இப்படிக்கு
மனோஜ் குமார்
சித்தர் பைத்தியம்
கோவை .
கருத்துக்கள் அருமை.அக ஆராய்ச்சி செய்தால் புலப்படும். புற ஆராய்ச்சியின் முடிவில் அக ஆராய்ச்சிக்கு தூண்டப்படவேண்டும். அது இல்லாததால் தான் இந்த அவலங்கள். ஏணியை வழிபடுகிறோம்.ஏணியில் ஏறி வந்தால்தான் ஆய்வு புரியும்.கொஞ்சம் காலம் ஆகும்.
ReplyDeleteஅன்புடன்.
மீனாக்ஷி.சங்கர சர்மா.ஜோதிஷம் & வைதீகம்.
சிதம்பரம்.
உபநிஷத்தில் 4வது பகுதியில் இந்த ஞானத்தெளிவு வருகிறது. முதல் மூன்றையும் படித்தால்தான் இந்த நான்காவது புரியும்.முதல் மூன்றிலேயே நாம் ஐக்யமாகிவிடுவதால் இந்த சோதனை.ஞான அறிவு எல்லோருக்கும் வருவதில்லையே!சரியை,கிரியை,யோகம்,ஞானம், என்கிற நான்கில் ஞானத்திற்கு வருவதற்குள் நமது ஆயுள் முடிந்துவிடுகிறது.அருட்பிரகாச வள்ளலார், பட்டினத்து அடிகள், கோதை நாச்சியார், மாணிக்கவாசகபெருமான், நந்தனார்ஸ்வாமிகள் இவர்கள் ஞானமார்க்கம் கண்ட பெரியோர்கள். இவர்கள் பாடல்கள் ஆக ஆய்வு செய்தால்மட்டுமே புரியும்.
ReplyDeleteஅன்புடன்.
மீனாக்ஷி.சங்கர சர்மா.ஜோதிஷம் & வைதீகம்.
சிதம்பரம்.