Tuesday, November 2, 2010

இந்த நிமிடத்தில் வாழ்வோம்

இந்த நிமிடத்தில் வாழ்வோம்

ஆசிய ஜோதி புத்த பகவான் சொன்ன போதனைகளில்
மிகவும் கவனத்தில் கொள்ள வேண்டிய போதனை
இந்த நிமிடத்தில் வாழுங்கள் என்பதுதான்.
சரி இதில் அப்படி என்னதான் உள்ளது
எல்லோருமே இந்த நிமிடத்தில்தானே வாழ்கிறார்கள் ?
என்று கூறினால் பதில் இல்லை என்பதாகதான் இருக்கும்.

நாம் உண்மையில் இந்த நிமிடத்தில் வாழ்கிறோமா ?
நமது உடல் மட்டுமே இந்த நிமிடத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறது.
நமது மனமானது
நேற்றை பற்றியோ, போன வாரத்தில் நடந்ததை பற்றியோ
போன மாதத்தில் நடந்ததை பற்றியோ
போன வருடத்தில் நடந்ததை பற்றியோ
அல்லது
நாளையை பற்றியோ
அடுத்த வாரத்தில் நடக்கப் போவதை பற்றியோ
அடுத்த மாதத்தில் நடக்கப் போவதை பற்றியோ
அடுத்த வருடத்தில் நடக்கப் போவதை பற்றியோ
சிந்தித்துக்கொண்டு இந்த நிமிடத்தில் நடக்கும்
சந்தோசத்தை இழந்து
எப்போதும் எதிர் காலத்திலோ
அல்லது
இறந்த காலத்திலோ வாழ்ந்து கொண்டு இருப்பதுடன்
நமது எண்ணத்தையும் எப்போதும்
எதிர்காலத்திலும்
இறந்த காலத்திலும் வாழ வைத்துக் கொண்டிருக்கிறது.

இதனால் நாம் எப்போதும் இந்த நிமிடத்தில் வாழாமல்
எதிர் காலம் பற்றிய சிந்தனையிலோ
அல்லது
இறந்த கால சிந்தனையிலோ காலத்தை வீனடித்துக் கொண்டிருக்கிறோம்.

இதற்கு முக்கிய காரணம் நாம் மனதின் கட்டுப்பாட்டில் இருப்பதுதான்
மனமானது எப்போதும் சிந்தனை வாயிலாக எதிர்காலம் மற்றும்
இறந்த காலத்தில் சஞ்சரித்துக் கொண்டேதான் இருக்கும்.
நம்மை நிகழ் காலத்தில் வாழ அது விடாது.

நாம் நிகழ் காலத்தில் வாழ
நாம் மனதின் ஓட்டங்களை கவனிக்கத் தொடங்கினால்
மனமானது அதன் ஓட்டத்தை நிறுத்தத் தொடங்கும்.
மனமானது அதன் ஓட்டத்தை நிறுத்தி விட்டால்
நாம் இந்த நிமிடத்தில் வாழ்பவர்களாவோம்.

இந்த பயிற்சியின் வாயிலாக நாம் காலத்தை
நம் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ள முடியும்.

புத்த பகவான் அதனால்தான்
இந்த நிமிடத்தில் வாழுங்கள் என்று சொன்னார்.

2 comments:

  1. 'நாம் மனதின் ஓட்டங்களை கவனிக்கத் தொடங்கினால்
    மனமானது அதன் ஓட்டத்தை நிறுத்தத் தொடங்கும்.'
    என சொல்லியுள்ளீர்கள். எதனால் அந்த ஓட்டம் நிற்கிறது? -------------'மனமானது அதன் ஓட்டத்தை நிறுத்தி விட்டால்
    நாம் இந்த நிமிடத்தில் வாழ்பவர்களாவோம்' என சொல்லியுள்ளீர்கள். மனம் நின்று போனால் காலம மட்டும் இருக்குமா? சரி, அப்படி இருந்தால் இந்த 'நிமிட காலத்தை' அறிவது எது? sundaran51@gmail.com

    ReplyDelete
  2. அன்பு சகோதரமே,
    மனமானது எப்போதும் இறந்த காலத்தையும், எதிர்காலத்தையும் பற்றி சிந்தித்துக் கொண்டே இருக்கும். அது நிகழ்காலத்தில் நம்மை வாழ விடாது. நிகர்காலத்தின் மகிழ்ச்சியை நாம் அனுபவிக்க விடாமல் இந்த மனமே தடுக்கின்றது. மனம் நின்றாலும் காலத்தின் தன்மை இருக்கும். அதை கடப்பதற்கு மனம் அறிவில் ஒடுங்கி, அறிவு ஆன்மாவில் ஒடுங்கும்போதுதான் காலம் கடக்க முடியும்.
    அன்புடன்
    சிவம்

    ReplyDelete