அன்பு அய்யா,
திருவள்ளுவர் சித்தர் மரபில் வந்தவர்.
சித்தர்கள் உருவ அருவ இரண்டு வழிபாடுகளையும் சொல்வார்கள்.
இருப்பினும் உருவ வழிபாட்டில் சொல்லப்பட்ட தெய்வ உருவங்கள் எல்லாம் அருவ
வழிபாட்டின் போது நமது உள்ளே நடைபெறும் மாற்றங்களை குறிப்பதற்காக சொல்வார்கள்.
செய்யுள் இயற்றும்போது முதலில் காப்பு செய்யுள் இயற்றுவது மரபு.
அதில் முதலாவதாக தும்பிக்கையானை முதலாவதாக வைத்தே இயற்றுவது நெடுங்காலமாக
நடைமுறையில் உள்ளது.
அந்த அடிப்படையில் விநாயகரை ஆதிபகவன் என்று கூறி இருக்கலாம் என்று ஒரு சிலர்
ஐயப்படக்கூடும்.
ஆனால் திருவள்ளுவரின் குறள் உருவ நிலை கடந்து அருவ நிலையை பற்றியும்,
சித்தர்களுக்கே சிறப்பான சாகா கல்வி பற்றியும் போதிப்பதனால் அவர் ஆதி பகவன்
என்று விநாயகரை சொல்லி இருக்க வாய்ப்பில்லை.
சரி அகர என்றால் என்ன என்று பார்த்தால்
சித்தர்கள் அகரம் என்பதனை உயிர் என்று கூறுகிறார்கள்
ஆக அகரம் ஆகிய இந்த உயிர்கள் தொடருவதற்கு
முழு முதல் காரண கர்த்தா யார் என்றால்
ஒன்றான சிவம் ( சிவன் அல்ல)
இயங்கா நிலையில் இருந்து சலனத்தின் காரணமாக இயங்கு நிலை பெற்றதனால் உயிர்கள்
தோன்றின.
அப்படிப் பட்ட ஆதியில் உள்ள இறைவனைதான் ஆதி பகவன் என்றும்
அவரே இந்த உலகு தோன்றுவதற்கு முதலானவர் என்பதனால் முதற்றே உலகு என்றும் கூறி
இருக்கிறார்.
ஆக அருவாய் உள்ள இறைவனே ஆதி பகவன் என்பது தெளிவு.
மேலும்
சாகா கல்வி பற்றி திருவள்ளுவர் முதல் அதிகாரத்தில் சொல்லி
இருக்கிறார் என்று வள்ளல் பெருமான் கூறி இருக்கிறார்
அதை அடுத்து சிந்திப்போம்.
அன்புடன்
சிவம்
No comments:
Post a Comment