அன்புள்ள சன்மார்க்க அன்பருக்கு,
சித்தர்களில் மிகவும் வசதியான நிலையினில் இருந்து
ஞான நிலையினை அடைந்தவர்கள் பத்திர கிரியாரும்
பட்டினத்தாரும் மட்டுமே.
பத்திரகிரியார் நாட்டின் மன்னனாக இருந்து பட்டினதாரால்
ஞானத்தை அடைந்தார்.
பட்டினத்தார் மிக பெரிய வியாபாரியாக இருந்து
இறைவனின் கருணையினால் ஞானியாக மாறினார்.
பட்டினத்தாரின் சீடனாக இருந்தும் பத்திரகிரியார்
முக்தியினை பட்டினத்தாருக்கு முன்பே அடைந்து விட்டார்.
காரணம் அவர் நிராசை என்னும் நிலையினை குரு சொன்ன உடன்
அக்கணமே நிராசை நிலையினை அடைந்தார்.
ஆகவே அவருக்கு முக்தி மிக சீக்கிரமே வாய்த்தது.
பட்டினத்தாருக்கு இறைவன் அசரீரியாக
பேய் கரும்பு எங்கு இனிக்கின்றதோ அங்கோ உனக்கு முக்தி கிடைக்கும்
என்று என்று கூறினார்.
பேய் கரும்பு என்பது உவர்ப்பு மற்றும் துவர்ப்பு சுவை கொண்டது.
பேய் கரும்பு என்பது பார்ப்பதற்கு சாதாரண வெள்ளை கரும்பை போல்தான்
இருக்கும். இருப்பினும் இனிப்பு சுவை இல்லாதது.
பட்டினத்தார் நடை பயணமாக பல இடங்களுக்கும் சென்று
பின்னர் திருவொற்றியூர் வந்து சேர்ந்தார்
அங்கு நிறைய பேய் கரும்பு விளைந்து இருந்தது.
அவர் அதில் ஒன்றை எடுத்து சுவைத்து பார்த்தார்
பேய் கரும்பு இனித்தது.
இந்த இடம் தான் முக்தி அடைவதற்கான இடம் என்பதனை உணர்ந்து
அங்கு விளையாடி கொண்டிருந்த சிறுவர்களிடம்
என்னை குழி தோண்டி புதைத்து விடுங்கள் நான் அதிலிருந்து
வெளியில் வந்து உங்களுக்கு இனிப்புகள் தருகிறேன்
என்று கூறினார். அதே போல் சிறுவர்களும் அவரை குழியில்
புதைத்தார்கள். அவரும் சித்தின் மூலம் வெளியில் வந்து
சிறுவர்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
அதே போல் மறுமுறையும் செய்தார்.
மூன்றாவது முறையாக உள்ளே சென்றவர் திரும்ப வரவில்லை.
சிவத்தோடு கலந்து விட்டார்.
இதில் இறைவன் பேய் கரும்பு இனிப்பு சுவை ஏற்ப்படும் இடத்தில்
முக்தி அடைவாய் என்று கூறியதற்கு காரணம்
முக்தி அடைவதற்கு முன்பு நமது அண்டத்திலிருந்து
வருகின்ற அமுதம் தேனை போல சுவை கொண்டதாக இருக்கும்.
தேனோடு எந்த பொருளை சேர்த்தாலும் அந்த பொருளின் சுவை போய்
தேனின் சுவையாக மாறி விடும்.
அதே போல்தான் மேலிருந்து வரும் ஐந்தாவது அமுதம்
தேனின் சுவையோடு இருக்கும்.
அந்த சுவையோடு பேய் கரும்பை சுவைத்தால்
உவர்ப்பு சுவை போய் இனிப்பு சுவை மட்டுமே தெரியும்.
இது இறைவனால் பட்டினத்தார்க்கு கொடுக்கப் பட்ட
முக்திக்கான அடையாளம்.
நமது வள்ளல் பெருமானும் அமுதத்தை பற்றி
குறிப்பிடும் போது அமுதம் ஐந்து நிலை உடையது என்று கூறி இருக்கிறார்கள்.
ஐந்தாவது வரும் அமுதமானது வரும்போது
இறைவனோடு ஐக்கியம் ஆகும் தகுதியை நாம் பெற்றிருப்போம்.
அனைத்து அமுத நிலையினை அடைய வேண்டும் என்றால்
ஒருமை மற்றும் ஜீவகாருண்ய மயமானால்
நாமும் இறை நிலையினை அடையலாம்.
அன்பிற்கினிய நக்கினம் சிவம் அவர்களே,
ReplyDeleteதங்களைப் பற்றி திரு அறிவொளி கூறியுள்ளார்.தொடர்பு கொள்வோம்.பேய்க் கரும்பூ இனிக்க வேண்டும்.கரும் பூவான கருப்புப்பூ எது என்று தெரிய வேண்டும்.பிறகு பேயான ஆத்தாள் பெத்தாத்தாள் ஆனால் அதுவே சுகம்.(பேயாத்தாள் ஆனாலும் பெத்தாத்தாள் வேண்டும்).இதுவே உள்கருத்து.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
நன்றி அன்பிற்கினிய நண்பர் சாமி அழகப்பன் அவர்களே. சகோதரர் அறிவொளி உங்களை பற்றி என்னிடமும் சொன்னார். சேர்ந்து ஆய்வு செய்வோம். இறை அருள் துணை புரியும்.
ReplyDeleteசிவம்
நன்றி அன்பிற்கினிய நண்பர் சாமி அழகப்பன் அவர்களே
ReplyDeleteகரும் பூவான கருப்புப்பூ தெரிந்தால்தானே உலகமே தெரியும். பேயான ஆத்தாள் விடுபட்டு பெத்தாத்தாள் உடன் சேர்ந்து பெத்தாத்தாள் அதுவும் பெத்தப்பன் சேரும்.
இதுவும்
பேயாத்தாள் உடனிருந்து பேயெனவே வாழும்
பேயாத்தாள் விலகிடவே பெத்தாத்தாள் புரியும்
பெத்தாத்தாள் அறிந்திடவே மெய்யாத்தாள் ஒளிரும்
மெய்யாத்தாள் ஒளிர்ந்திடவே மெய்யான மெய்யாமே.
ஐயா, கரும்பூ என்றால் என்ன என்று தெரியும் ஐயா... இந்த பேய் என்றால் என்ன என்று தான் தெளிவாக இல்லை. கூறுங்கள் ஐயா
Deleteஅன்பான நக்கினம் சிவம் அவர்களே ,
ReplyDeleteஉங்கள் விளக்கம் மிக சுருக்கமாக தெளிவாக இனிமையாக உள்ளது. வள்ளலார் குறிப்பிடும் ஐந்தாவது அமுதம் பற்றி புரிந்து கொண்டேன். மற்ற முதல் 4 அமுதங்கள் யாது ? அந்த 4 நிலைகள் என்ன ? ஜெபம், தியானம், தவம், ஞானம், முக்தி என்ற 5 நிலைகளில் முக்தி நிலை தான் 5 வது அமுதம் என எண்ணுகிறேன். மற்றவையும் படிப்படியான அமுதம் தரும் நிலைகள் என்பது பற்றி தங்கள் கருத்து தாருங்கள். நன்றி !!