Thursday, January 20, 2011

தருமச்சாலை - ஞானசபை விளக்கம்

அன்பு சகோதரர் அவர்களுக்கு,

நமது வள்ளல் பெருமான் முதலில் தருமச்சாலையையும்,
அடுத்து ஞான சபையையும் ஏற்படுத்தினார்கள்.

இது அக அனுபவத்தை புறத்தில் காட்டுவதற்காக ஏற்படுத்தப்பட்டது.

தருமச்சாலை எதற்காக கட்டப்பட்டது என்றால்
சீவகாருண்யத்திற்காக கட்டப்பட்டது.
சரி
சீவகாருண்யம் எதற்காக நாம் கடைபிடிக்க வேண்டும் ?
நாம் அனைவரும்
அதாவது மனிதர்கள் முதல் புழு புச்சிகள் வரை உள்ள சீவர்கள்
அனைவரும் ஒன்றான பரம்பொருளில் இருந்து வந்தவர்கள்.
ஆகவே நாம் அனைவரும் சகோதர உரிமை உடையவர்கள்.
ஒரு சகோதரன் பசியுடன் இருக்கும்போது
மற்றொரு சகோதரன் உணவருந்துவது தகுமா ?
ஆகவே பசித்தவர்களுக்கு உணவளிப்பது என்பது
நமக்கு நாமே உணவு அளித்துக்கொள்வதே ஆகும்.
அதுவே ஒருமை நிலைக்கு நம்மை மேலெடுத்துச் செல்லும்.

அதாவது தற்போதம் எனும் நான் எனும் உணர்வு கடந்தால்
தருமச்சாலை எனும் சீவகாருண்ய மயமாவோம்.
இது உள் அனுபவத்தில் விளங்கும்.

அடுத்து
ஞான சபையில் உள்ள சிற்சபை, பொற்சபை என்பது
இரண்டு கண்களையும் வலது கண் சூரியகலையையும்,
இடது கண் சந்திர கலையையும், நடுவில் உள்ள
ஞானசபை என்னும் முன்றாவது கண் என்னும் ஆன்மா
அக்னி கலையாகவும், அந்த அக்னி கலையான ஆன்மாவின்
உள்ளே இறைவன் திருநடம் புரிகின்றார்.

அதை புரிந்து கொள்வதற்கு நமக்கு தடையாக இருப்பது
நமது மனமும் அதை பற்றிய ராக துவேசங்களும்தான்
அதுதான் திரையாக நமது ஆன்மாவை தெரியவொட்டாமல
மறைத்து உள்ளது. அந்த திரை விலகுவதற்கு மனதின்
கட்டுப்பாட்டிலிருந்து அறிவின் நிலைக்கு நாம் உயர வேண்டும்.

அந்த நடம் புரியும் இறைவனை நாம் தற்போதமற்ற நிலையில்
காண்பதே ஜோதி தரிசனம்.

இது நமது தூல கண்களால் காணக்கூடியதல்ல.

அடுத்து கடவுள் நலை நாம் உணர்ந்ததனால் அம்மயமாதல்
எனும் சீவ சிவ ஐக்கியம் தானே ஏற்படும்.

இதைதான் நமது வள்ளல் பெருமான் ஞானநிலையினை
நாம் தெரிந்து கொள்வதற்காக புறத்திலே நமக்காக கட்டி வைத்தார்கள்.

2 comments:

  1. நம்மை நாமறிவோம் ! சிந்தையுள் ஓடிக்கொண்டிருப்பது நக்கினம் வழி .......உயர்வு ...உயர்வு ...உயர்வு ........உயர்வு ...உயர்வு ...உயர்வே ! உணர்ந்த அடுத்த நொடி தளைகள் .....தடைகள் தூள் தூளாகும் .....ஆக வேண்டும் ! அதனை நாம் காண வேண்டும் .....

    ReplyDelete
  2. அய்யா தஞ்சை கோ, கண்ணன் அவர்களின் வருகைக்கும், வாழ்த்துதலுக்கம நன்றியுடையேன்.
    சிவம்

    ReplyDelete