Tuesday, March 27, 2012

தமிழ் எழுத்து வடிவங்கள் சித்தர்களால் வடிவமைக்கப்பட்டவை - 4


அன்பு சகோதரமே,

 இந்த கானும் உலகம் நீர், நெருப்பு, மண், காற்று, ஆகாயம் என ஐந்து பூத தத்துவங்களால் உருவானது என்பதை நமது முப்பாட்டன்மார்களான சித்தர் பெருமக்கள் சொல்லியுள்ளார்கள், அதை இன்ற நாமும் ஏற்றுக்கொள்கிறோம்.

இந்த ஐந்து பூதங்களில் ஆகாயமே அநாதியானது, அதாவது ஆகாயம் அளவிட முடியாதது. மேலும் ஆகாயம் இயக்கமற்றது. அந்த ஆகாயத்தில் காற்றே இயக்கமுடையது. ஆகாயத்தில் சலனமே காற்று.

காற்றும், ஆகாயமும் பூரணம் என அழைக்கப்படுபவை.

காரணம் எந்த ஒரு பொருளின் வெற்றிடத்தையும் இந்த காற்றும். ஆகாயமும் சூழ்ந்து கொள்ளும்.

ஒரு குடம் இருக்கின்றது என்றால் அதன் உள்ளே உள்ள வெற்றிடத்தில் 
ஆகாயமும், காற்றும் சூழ்ந்திருக்கும், அந்த குடம் உடைபடும்போது அதனுள்ளிருந்த ஆகாயமும், காற்றும் வெளியில் கலந்து விடும்.

ஆகவேதான் ஆகாயமும், காற்றும் எந்த ஒரு வெற்றிடத்தையும்
வெற்றிடமாக வைத்திருக்காமல் அதனை முழுமை பெற செய்வதனால்
இவை பூரணம் எனப்படும். பூரணம் என்றால் முழுமை அடைதல் அல்லது முழுமை அடையச் செய்தல் எனப் பொருள் படும்.

சீனத்து அறிஞர் லாவோட்சு கூறுவது போல நாம் அனைவரும் வெற்றிடத்தையே எப்போதும் பயன்படுத்துகிறோம்.

ஒரு வீடு இருக்கின்றது என்றால் அதன் சுவர்களுக்குள் இருக்கும்
வெற்றிடமே நாம் பயன்படுத்தும் இடமாக இருக்கின்றது.

வீட்டின் உள்ளே இடம் விடாமல் முழுமையாக சுவர்களால் கட்டினால் நாம் அதை வாழ ஏற்ற இடமாக கருதுவதில்லை.

ஒரு குடம் இருக்கின்றது என்றால் அதன் வெற்றிடமே நாம் பயன்படுத்துவதறகு ஏற்றதாக இருக்கின்றது.

அந்த வெற்றிடமும் நமது கண்ணுக்கு புலனாகாத காற்றையும், ஆகாயத்தையும் தன்னுள்ளே கொண்டுள்ளது.

ஆக நாம் வாழ தேவையானது ஆகாயமும், காற்றுமே ஆகும்.
காரணம் அவைதான் அதன் இருப்பிடத்தை நமக்காக விட்டுக்கொடுத்து
விட்டு வெளியேறவும் நாம் வாழவும் வழி செய்கின்றன.

சரி தமிழ் எழுத்துக்களுக்கும் இந்த காற்று, ஆகாயம் பற்றிய கட்டுரைக்கம் என்ன சம்பந்தம் என நினைக்கத் தோன்றுகின்றதா ?

தொடர்பு இருக்கின்றது. அதைத்தான் அடுத்து சொல்லப்போகின்றேன்.

அதற்கு முன்னால்

காற்றும், ஆகாயமும் என்ன வடிவங்களை கொண்டிருக்கின்றன என்று
தெரிந்தவர்கள் சொல்ல வேண்டும்.

என்ன கண்க்கு புலனாகாத காற்றம், ஆகாயமும் வடிவம் பெற்றுள்ளனவா ? என கேட்கத் தோன்றுகிறதா ? 

ஆம் அவை வடிவத்தை பெற்றுள்ளன, அவை என்னென்ன வடிவங்கள் ?

அது மட்டுமல்லாமல் அவை ஏன் அந்த விதமான வடிவங்களை பெற்றுள்ளன என காரணத்துடன் விளக்க வேண்டும்.

அடுத்து காற்றுள்ள போதே துற்றிக் கொள்வோம்.

No comments:

Post a Comment