அன்பு சகோதரமே,
ஒரு மொழி எனப்படுவது வெறும் வார்த்தைகளை
கொண்டது மட்டுமல்ல,
அதன் தொண்மை, அதன் வழக்காறு, அதன் சொல்லாட்சி
போன்ற பலவற்றையும் கொண்டதாக இருக்கும்.
அதே போல மொழிக்கான எழுத்துக்கள்,
அதன் வடிவங்கள் ஏதோ ஒரு சிலர் நினைப்பது போல
ஏனோ தானோ என ஏற்பட்டதல்ல.
அதிலும் நமது தமிழ் மொழியின் எழுத்து வடிவம்
உச்சரிப்பு வடிவத்தோடு தொடர்பு படுத்தியே ஏற்படுத்தப்பட்டது.
உச்சரிப்பு எனப்படுவது ஒலி அலைகளோடு தொடர்புடையது.
ஒலி அலைகள் காற்றோடு தொடர்புடையது.
காற்று நமது சீவனோடு தொடர்புடையது.
நமது சீவன் ஆன்மாவோடு தொடர்புடையது.
அந்த ஆன்மா சிவம் எனும் எனும் பேரான்மாவோடு தொடர்புடையது.
ஆக
அப்படிப்பட்ட ஒலி அலைகளில் ஒவ்வொரு எழுத்திலிருந்தும் உருவாகும்
ஒலி ஒவ்வொரு சக்தியை மையப்படுத்தியே ஏற்படுத்தப்பட்டது.
நாம் மந்திரங்களாக சொல்லக்கூடிய வார்த்தைகள் ஏன் மகிமை வாய்ந்ததாக கருதப்டுகின்றன.
காரணம் அதை உச்சரிக்கும் போது எழுகின்ற ஒலி அலைகளின்
தாக்கம் காற்றில் ஏற்பட்டு பல மாற்றங்களை உண்டாக்குகின்றது.
இதை பருப்பொருட்களை மட்டுமே நம்பக்கூடியவர்கள்
எப்படி ஏற்றுக்கொள்வார்கள் என்று நாம் எதிர்பார்க்க முடியும்.
நமது வள்ளல் பெருமான் சொன்ன பரிபாசை கீழே கொடுத்துள்ளேன்
பரிபாஷை - அங், சிங், வங், பங், அம், விந்து, நாதம், சிவ, வசி, ஓம், அரி, அர, சத்து, சித்து, ஆனந்தம், பரிபூரணம், ஜோதி, சிவயவசி, சிவாயநம, நமசிவாய, ஆ, ஈ, ஊ, ஐ, நாராயணாயநம, சிவோகம், சோகம் முதலியவாகச் சமயமதங்களில் குறிக்கப்பட்ட மந்திர தந்திர ரகசிய வாசக வாச்சிய வசன அக்ஷர தத்துவ பவுதிக முதலியவையும் பரிபாஷையாம். மேற்குறித்த வண்ணம் ஜபித்தும், தியானித்தும், அர்ச்சித்தும், உபாசித்தும், சமாதிசெய்தும், சுவாசத்தை அடக்கியும், விரதமிருந்தும், இவை போன்ற வேறு வகைத் தொழிற்பட்டும் பிரயாசை யெடுப்பது வியர்த்தம். சுத்த சன்மார்க்கமே சிறந்தது. பாவனாதீதாதீதம், குணாதீதாதீதம், வாச்சியாதீதாதீதம், லட்சியாதீதாதீதம் ஆகிய சுத்த சன்மார்க்கப் பொருளாகிய அருட்பெருஞ் சோதி ஆண்டவரால் இதனது உண்மைகள் இனி வெளிப்படும்.
அடுத்து மேலும் வரும்.
No comments:
Post a Comment