Tuesday, March 27, 2012

தமிழ் எழுத்து வடிவங்கள் சித்தர்களால் வடிவமைக்கப்பட்டவை.



அன்பு சகோதரமே,

நமக்கு தெரிந்த கல்வி ஆய்வு முறையிலோ,
நமக்கு தெரிந்த வரலாற்று ஆய்வு முறையிலோ
நமக்கு தெரிந்த அறிவின் துணைக் கொண்டோ
அவர் சொன்னார். இவர் சொன்னார்,
கூகுள் சொன்னது, யாகூ சொன்னது
விக்கி பிடியா சொன்னது என
தமிழ் மொழியின் எழுத்துக்களை ஆய்வு செய்வது
குருடன் யானையை பற்றி சொன்னதை போன்றதாகவே முடியும்.

எழுத்து வடிவங்கள் அனைத்தும் சித்தர்களால் வடிவமைக்கப்பட்டவை.
இவை அனைத்தும் தத்துவ விளக்கங்களாக அமைக்கப்பட்டவை.
தத்துவம் விளக்கம் புரிந்தவர்கள் இதற்கான விடையை கண்டு பிடிக்க முடியும்.
நமது உலகியல் அறிவை பயன்படுத்தி இது இப்படி இருக்கலாம்
அது அப்படி இருக்கலாம் என்பது நமது கற்பனை திறனையே காட்டும்.

தமிழ் எழுத்துக்கள் ஞானத்தோடு தொடர்புடையவை என்பதை 
முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
புள்ளி எதற்காக வைக்கப்படுகிறது,
புள்ளியில் தொடங்கி சுழிப்பது, நீட்டுவது, வளைப்பது, கீழிழுப்பது
முடிப்பது என ஒவ்வொரு நிலைக்கும் ஒவ்வொரு காரண காரியம் இருக்கின்றது.
அதை எல்லாம் தெரிந்து கொள்ளாமல் நாம் செய்கின்ற ஆய்வு
நமக்கு வேண்டுமானால் சரியாக படலாம்
ஆனால் உண்மை உணர்ந்த்வர்களால் 
நமது செயல்கள் பரிகசிக்கப்படலாம்.

இருட்டிலேயே வாழ்ந்து கொண்டு இருப்பவனிடம்
வெளிச்சம் என்று ஒன்று இருக்கிறது என்று சொன்னால் நம்ப மாட்டான்.

பருப்பொருள் மட்டுமே உண்மை என்று நம்புபவன்
அரும்பொருள் ஒன்று உண்டு என்று சொன்னால் நம்ப மாட்டான்.

இனிப்பைப் பற்றியே அறியாதவன், சுவைத்திராதவன்
இனிப்பைப்பற்றி சொன்னால் நம்ப மாட்டான்

காதல், அன்பு  பற்றிய நுண்ணுனர்வு தெரியாதவனிடம்
காதல், அன்பு பற்றி சொன்னால் எப்படி புரிந்து கொள்வான்

அதுபோலதான்

பேரறிவை புரியாத சிற்றறிவாளரிடம்
பேரறிவை புரிய வைப்பதும் கடினமே.

அன்பு சகோதரன்
நக்கினம் சிவம்

No comments:

Post a Comment