Tuesday, March 27, 2012

தமிழ் எழுத்து வடிவங்கள் சித்தர்களால் வடிவமைக்கப்பட்டவை - 2


அன்பு சகோதரமே,

உலகில்
ஆய்வாளர்கள் என்று யாரை சொல்கிறார்கள் ?
புறப்பொருட்களையும், பருப்பொருட்களையுமே 
ஆய்பவர்களை என்றால் ஆம் அவர்கள் உண்மையை 
ஏற்றுகொள்ள மாட்டார்கள்தான்.
காரணம்
ஆய்வு எனப்படுவது அவர்களை பொறுத்தவரை
பருப்பொருட்களாக கண்ணுக்கு புலப்படுபவை மட்டுமே
உண்மை எனும் கோணத்தில் ஆய்பவர்கள்.
அப்படி பருப்பொருட்களாக இல்லாதவற்றையும்
பருப்பொருள் நிலைக்கு அவர்களால் நுணுக முடியும் பட்சத்தில்
அதனை ஒப்புக்கொள்வார்கள்.
அப்படி
பருப்பொருள் நிலைக்கு அவர்களால் நுணுக முடியாத பட்சத்தில்
அதைப்பற்றி வேறு யாராவது மேற்கோள் காட்டி இருக்கிறார்களா,
அல்லது பழைய சுவடிகள், கல்வெட்டுகள், வேறு ஏதாவது ஆதாரங்கள்
அதை வைத்தே அது உண்மை என்று தீர்மானிப்பார்கள்.

உண்மையில் ஆய்வு எனப்படுவது யாது ?

ஒரு ஐந்து வருடங்கள் ஒரு துறையை பற்றி ஆய்வு செய்வதுதான் ஆய்வா ?
ஒரு முனைவர் பட்டம் பெறுவதற்காக செய்யப்படுகின்ற ஆய்வுகளை
கல்லுரிகளோ, பல்கலைகழகங்களோ வேண்டுமானால் ஆய்வாக ஏற்றுக்கொள்ளலாம்.
ஆனால் உண்மையான ஆய்வு எனப்படுவது தன் வாழ்நாள் முழுவதும்
தான் எடுத்துக்கொண்ட துறையை பற்றி ஆய்வு  செய்வதே ஆய்வாக எடுத்துக் கொள்ளப்படும்.

முதலில் ஆய்வாளர்களை முனைவர் என அழைப்பதே சரியான சொல்லாக்கமில்லை.
ஆய்வாள்ர்களை ஆய்வர், நுண்ணாய்வர் என அழைப்பதே சரியானதாக இருக்கும்.

ஆய்வு முறையில் அக ஆய்வு, புற ஆய்வு என இருவகை உண்டு.
பட்டங்கள் பெறுவதற்காகவும். பேர், புகழ் பெறுவதற்காகவும்
செய்யப்படுபவை புற ஆய்வு.
இவ்வகை ஆய்வுகளின் நேற்றைய முடிவுகள்
இன்றைக்கு தவறுகளாகவும்
இன்றைய  முடிவுகள் நாளைக்கு தவறுகளாகவும்
மாறிக்கொண்டே இருப்பவை.

ஆனால் அக ஆய்வு செய்வோரின் முடிவுகள்
நேற்றைய முடிவுகளும், இன்றைக்கு பெற்ற முடிவுகளும்,
நாளைய முடிவுகளும் ஒன்றாகவே இருக்கும்.
காரணம் இவர்களது ஆய்வில் ஒருமை நிலை இருக்கும்.

ஆகவே புற ஆய்வான பிழைப்பு ஆய்வை மேற்கொண்டவர்கள்
ஒப்புக்கொள்ளவில்லை எனில் 
நாம் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை.



அன்பு சகோதரன்
நக்கினம்சிவம்

No comments:

Post a Comment