Tuesday, April 6, 2010

ரூபா போனால் பாபா ஆகலாம்

ஒரு சமயம் வட நாட்டிலுள்ள ஒரு சாதுவை ஒரு பணக்காரர் பார்க்க சென்றார்.
வட நாட்டில் ஞானிகளை பாபா என்று அழைப்பார்கள்.
அங்கு நிறைய மனிதர்கள் அந்த பாபா விடம் ஆசி வாங்க வந்திருந்தார்கள்.
அந்த பணக்காரரும் பாபாவை சந்தித்து ஆசி பெற்றார்.
அப்போது அவர் பாபாவை பார்த்து
பாபா என்னிடம் பணம் நிறைய இருக்கிறது ஆனால்
நிம்மதி இல்லாமல் இருக்கிறேன்.
நீங்களோ பணம் எதுவும் இல்லாமல் மிகவும் நிம்மதியாக
காணப் படுகிறீர்கள். மேலும் அனைவருக்கும் ஆசி வழங்கி
அனைவரையும் அமைதி படுத்துகிறீர்கள்.
ஆகவே நானும் பாபா ஆக என்ன செய்ய வேண்டும் என்று கேட்டார்.
அதற்கு பாபா ரூபா போனால் பாபா ஆகலாம். என்று பதிலளித்தார்.

பணக்காரர் வீட்டிற்கு வந்த உடன் தன்னிடம் இருந்த ரூபாய்
அனைத்தையும் பாபாவின் ஆசிரமத்திற்கு அளித்து விட்டார்.
பின்பு மறுபடியும் பாபாவிடம் போய் நான் இப்போது பாபா ஆகி விட்டேனா
என்று கேட்டார். மீண்டும் பாபா ரூபா போனால் பாபா ஆகலாம் என்று
பழைய படியே கூறினார்.

பணக்காரர் வீட்டிற்கு சென்று தன்னுடைய நிறுவனங்கள் அனைத்தையும்
ஆசிரமத்திற்கு எழுதி வைத்தார்.
பின்பு மறுபடியும் பாபாவிடம் போய் நான் இப்போது பாபா ஆகி விட்டேனா
என்று கேட்டார். மீண்டும் பாபா ரூபா போனால் பாபா ஆகலாம் என்று
பழைய படியே கூறினார்.

பணக்காரர் வீட்டிற்கு சென்று அமைதியாய் இருக்க முயன்றார்.
ஆனால் அவரது மனைவி எல்லா பணத்தையும் ஆசிரமத்திற்கு
எழுதி வைத்து விட்டு என்னை ஏழை ஆகி விட்டீர்களே என்று திட்ட
ஆரம்பித்தாள்.

இனி வீட்டில் இருக்க முடியாது என்று ஆசிரமத்தில் வந்து தங்க ஆரம்பித்தார்.
அப்போது உலகத்தில் எல்லா உயிர்களும் படுகின்ற கஷ்டங்களை உணர
ஆரம்பித்தார்.

இதன் காரணமாக அவருக்கு ஜீவ காருண்யத்தின் பயனாய் கிடைக்கும்
ஒருமை நிலை ஏற்பட்டது.
ஒருமை நிலையில் எல்லா உயிர்களையும் தானாக காண்கின்ற தன்மை
ஏற்பட்டது.

அப்போதுதான் அவருக்கு பாபா சொன்ன ரூபா போனால் பாபா ஆகலாம்
என்ற கருத்துக்கு பொருள் விளங்கியது.
மற்ற உயிர்களை அந்த ரூபத்தால் பார்க்காமல்
தன்னுடைய ரூபமாக கான்பதைதான் பாபா கூறினார்.
என்பதை உணர்ந்தார்.

இந்த முறை பாபாவை காண சென்றார்.
பாபா எழுந்து வந்து வாருங்கள் பாபா என்று ஆற தழுவி கொண்டார்.

ஆகவே அன்பர்களே
ஜீவ காருண்யம் என்பது
எல்லா உயிர்களையும் தானாக காண்பதாகும்.
பிற உயிர்கள் படுகின்ற துன்பங்கள்
தான் படுவதாக நினைத்து உதவுவது ஆகும்.
அதுவே ஒருமை கல்வி. அதன் அடுத்த படியே
சாகா கல்வி.

அன்புடன்
விழித்திரு ஆறுமுக அரசு

No comments:

Post a Comment