Tuesday, April 6, 2010

சன்மார்க்கத்தில் ஞான நிலை

அன்புள்ள சன்மார்க்க அன்பருக்கு,

பதஞ்சலி யோக சூத்திர முறையில் யாரும் ஞான நிலையினை அடைந்ததாக தெரியவில்லை. காரணம் பதஞ்சலி யோக சூத்திரத்திற்கு சரியான விளக்கம் யாராலும் எழுதப்படாததுதான். ஆனால் நமது சன்மார்க்கத்தில் ஞான நிலையினை அடைவதற்கு கீழ் ஆதாரம் ஆறு வுள்ளதைப்போலே மேல் ஆதாரம் ஆறு நிலைகளை கடக்க வேண்டும். மேல் ஆதாரம் ஆறும் புருவ மத்தி தொடங்கி அண்டம் வரை நீளும் . இங்கு புருவ மத்தியம் மூலாதாரமாக வுள்ளது. இந்த புருவமத்தி மூலதரத்தை காற்றின் துணை கொண்டு மேல் ஏற்றுவதன் மூலம் உயர் ஞான நிலையான் நாத விந்து நிலையினை அடைய முடியும். நமது வள்ளல் பெருமானும் இதைத்தான் கூறி இருக்கிறார்கள். அவ்வையாரின் அகவலில் மூலாதாரத்து மூண்டெழு கனலை காலால் எழுப்பி என கூறுகிறார்கள். பதஞ்சலி கூறுவது போலே மூலாதாரம் குதம் எனப்படும் மலக்குடலுக்கு அருகில் இருக்கும் என்றால் அந்த இடத்தில் மூண்டு எழுகின்ற கனல் எங்கு உள்ளது. மூண்டு ஏழு கனல் புருவ மத்தியத்தில் மட்டுமே உள்ளது. அதனை காலால் எழுப்பி என்றால் கால் என்றால் காற்று ஆக காற்றின் மூலமாய் தூண்டி மேல் ஆதாரம் ஆறையும் கடக்க வேண்டும். அங்குதான் 1008 இதழ் கொண்ட தாமரை மீது நாதம் விந்து நிலைகள் உள்ளன என்று சித்தர்களும் கூறி உள்ளனர். அந்த நிலையினை அடைவதக்கு துரியம் கடந்து துரியாதீதம் நிலையினை அடைய வேண்டும். இங்கு துரியம் மற்றும் துரியாதீதம் என்பது ஒரு சிலர் நான் துரியாதீதம் கடந்து வெட்டவெளி கடந்து விட்டேன் என்பது போலே சுலபமானது இல்லை. உறும் உணர் உணர்வும் உணர்வெலாம் கடந்த அனுபவாதீதமாம் அருட்பெரும்ஜோதி - தனு கரனாதிகள் தாம் கடந்து அறியும் ஓர் அனுபவமாகிய அருட்பெரும்ஜோதி - துரியமும் கடந்த சுகம் பூரணம் தரும் போன்ற வள்ளல் பெருமானின் வரிகளால் உணர வேண்டும்.

அன்புடன்
விழித்திரு ஆறுமுக அரசு

No comments:

Post a Comment