Sunday, April 11, 2010

சிதம்பர ரகசியம்

அன்புள்ள சன்மார்க்க அன்பருக்கு,

சிதம்பர ரகசியம் என்பது நடராஜரின் உருவத்திலேயே உள்ளது.
நாம் நடராஜரின் சிலையை உற்று நோக்கினால்
நடராஜரை சுற்றி ஜோதி வடிவம் உள்ளது.
நடராஜர் வலது காலை தூக்கி ஆடுகிறார்.
நடராஜரை சுற்றி உள்ள அக்னிதான் நமது ஆன்மா
அந்த ஆன்மா சிற்சபையில் உள்ளது.
சிற்சபை என்பது நமது புருவ மத்தியம்
அந்த ஆன்மா என்னும் அக்கினியின் உள்ளே
சிவமான இறைவன் நடம் இட்டுக் கொண்டிருக்கிறார்.
அந்த நடத்தை தற்போதம் அற்று அதாவது
நான் என்கின்ற உணர்வு கடந்து
தரிசனம் காண்பதே ஜோதி தரிசனம் ஆகும்.
அதைதான் நமது வள்ளல் பெருமான்
ஜோதி உள் ஜோதி என்று கூறி இருக்கிறார்கள்.

ஜோதி தரிசனத்தின் போது நான் என்கின்ற உணர்வு போய் விடுவதனால்
அங்கே ஆணவம் கன்மம் மாயை மூன்று விலகி இருக்கும்.
துரியமும் கடந்த சுகம் பூரணம் என்னும் நிலையினை
சுகாதீதம் என்னும் நிலையினை அடைந்து இருப்போம்.
இதைதான் கடவுள் நிலை அறிந்து அம்மையம் ஆதல்
என்று சித்தர் பெருமக்களும், நமது வள்ளல் பெருமானாரும்
மறை பொருளாக பாடல்களாக பாடி உள்ளார்கள்.
இங்கே இறை தரிசனம் என்பது
நமது ஆன்மாவின் உள்ளே குடி கொண்டுள்ள
சிவமான ஜோதி தரிசனம் பெறுவதுதான்.
தூலமான பொருளை காண தூலமான கண்கள் பயன்படும்
சூக்குமமாய் உள்ள சிவத்தை நாம் ஆன்மாவினால் காண்பதனால் தான்
இது ஆன்ம தரிசனம் என்றும் பெயர் பெறுகிறது.

அன்புடன்
விழித்திரு ஆறுமுக அரசு

No comments:

Post a Comment