Monday, May 17, 2010

சுவர்க்கம் - நரகம்

சுவர்க்கம் - நரகம் என்பது எதோ மேல் உலகில் உள்ளது போல
எல்லா மதங்களிலும் கூறப் பட்டுள்ளன.
ஆனால்
இன்பம் மற்றும் துன்பம் அனைத்தையும் அனுபவிப்பது
நமது உடலுடன் சேர்ந்த ஆன்மாவே.
இந்த உடலை விட்ட பின்னர் இந்த ஆன்மா
எந்த இன்பத்தையோ அல்லது
எந்த துன்பத்தையோ
எதன் மூலம் அனுபவிக்கும்.
இந்த தூல உடலுக்கு மட்டுமே
வலியும், சந்தோஷமும்.
தூலம் விட்ட பின்னர் எவ்வளவு உணவு வைத்தாலும்
எப்படி சாப்பிட முடியும்.
எத்தனை அழகான பெண் இருந்தாலும் எப்படி ரசிக்க முடியும்.
நெருப்பிலே போட்டு எரித்தாலும் எப்படி நமக்கு வலிக்கும்.
நமக்கு தேகம் என்று ஒன்று இருந்தால் மட்டுமே அது வேகும்.
ஆன்மா எப்படி வேகும்.
ஆக சுவர்க்கம் மற்றும் நரகம் என்பது
நம் உடலை விட்ட பிறகு ஏற்படுவதல்ல.
இந்த உடல் இருக்கும் போதே அதை அடைவதுதான்.
முதலில் நரகம் என்றால் என்ன ?
நர + அகம் = நரகம்
நரர்களாகிய மனிதர்கள் வாழ்கின்ற இந்த இடம் தான் நரகம்.
அதாவது
நாம் நரன் என்னும் மனித தரத்துடன் வாழ்வது நரகம்.
நரன் நிலையை விட்டு இறை நிலையை அடைவதுதான்
சொர்க்கம்.
அதாவது கடவுள் நிலை அறிந்து அம்மயமாதலே சுவர்க்கம் எனப்படும்.
அன்புடன்
நக்கினம் சிவம்

2 comments:

  1. Outstanding. Your though process is same like mine. There is a Thiruvasgam song exactly with the same meaning... I am searching for it. I will post when I get it.

    ஊர்ச்சுடுகாட்டு எரிப்பிச்சனின் தீந்தமிழ்க்குஞ்சு
    சிவ அறிவொளியன்
    தனித்திரு, விழித்திரு, பசித்திரு

    ReplyDelete
  2. ஆதமிலி யான்பிறப்
    பிறப்பென்னும் அருநரகில்
    ஆர்தமரும் இன்றியே
    அழுந்துவேற் காவாஎன்
    றோதமலி நஞ்சுண்ட
    உடையானே அடியேற்குன்
    பாதமலர் காட்டியவா
    றன்றேஎம் பரம்பரனே.


    இருள்தி ணிந்தெழுந் திட்டதோர் வல்வினைச்
    சிறுகுடி லிதுஇத்தைப்
    பொருளெ னக்களித் தருநர கத்திடை
    விழப்புகு கின்றேனைத்
    தெருளும் மும்மதில் நொடிவரை இடிதரச்
    சினப்பதத் தொடுசெந்தீ
    அருளும் மெய்ந்நெறி பொய்ந்நெறி நீக்கிய
    அதிசயங் கண்டாமே.

    இந்திரிய வயமயங்கி
    இறப்பதற்கே காரணமாய்
    அந்தரமே திரிந்துபோய்
    அருநரகில் வீழ்வேற்குச்
    சிந்தைதனைத் தெளிவித்துச்
    சிவமாக்கி எனையாண்ட
    அந்தமிலா ஆனந்தம்
    அணிகொள்தில்லை கண்டேனே.

    All three songs are from Thiruvasagam!

    ReplyDelete