Tuesday, April 6, 2010

அருட்பெருஞ்ஜோதி விளக்கம்

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி விளக்கம்

அன்புள்ள சன்மார்க்க அன்பருக்கு,

நமது வள்ளல் பெருமான் அருளிய மகா மந்திரமான

"அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி "*

என்பதற்கு விளக்கம் இறை தரிசனத்தின் போது ஏற்படுகின்ற அனுபவம் ஆகும்.
நமது வள்ளல் பெருமான் ஒரு ஜாமம் இக விசரமின்றி ஒருமையுடன்
இறை உணர்வுடன் இருந்தால் இறை அருள் கிடைக்கும் என்று கூறி
இருக்கிறார்கள். அதற்கான காரணம் மேற்கண்ட அருள் அனுபவம் வாய்க்கும்
என்பதுதான்.

அப்போது தான் என்கின்ற தற்போதம் போய்
அருள் தரிசனம் என்கின்ற அருளே வடிவாக நாம் மாறி இருப்போம்.
அதன் காரணமாக நம்மை பற்றிய ராக துவேஷங்களான
திரைகள் விலகி அடுத்து ஜோதி தரிசனம் வாய்க்கும்.
ஜோதி தரிசனத்தின் போது நாம் ஒருமை நிலையுடன் கூடிய கருணை வடிவமாக அதாவது இறை
நிலையை அடைந்து இருப்போம்.

அந்த அனுபவம் தான் நமது வள்ளல் பெருமானாரால்

"அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி "

என்று அருளப்பட்டது.

இறை தரிசனத்திற்கு முன்பு தற்போதம் போய்
அருள் பெருகி ஜோதி தரிசனம் வாய்க்கும்
அப்போது தனி பெரும் கருணை என்றால்
ஒருமையுடன் கூடிய தயா வடிவம்
ஜீவகாருண்யமே வடிவமாக
அன்பே வடிவாக நம் நிலை மாறும்.
அருள் அனுபவமே மகா மந்திரமாக
நமது வள்ளல் பெருமானால் அளிக்கப்பட்டது.

அன்புடன்

விழித்திரு ஆறுமுக அரசு

No comments:

Post a Comment