Tuesday, April 6, 2010

உறும் உணர் உணர்வு

அன்புள்ள சன்மார்க்க அன்பர் அவர்களுக்கு,

ஒன்றான மெய்பொருள் சிவம்
அதுவே அருட்பெரும் ஜோதி
அது நம்முள் ஆன்மாவாக விளங்குகிறது.

ஒன்றான சிவ்த்திலிருந்து சிவம் என்ற நிலையில்
இருந்து ஆன்மா என்ற நிலை அடைந்தது.
அது நமது புருவ மத்தியம் என்று சொல்லப்படுகின்ற
புருவ மதியத்திற்கு உட் புறமாக நடு உச்சி மண்டைக்கு கீழாக
ஒளி வடிவத்தில் வெற்றிடத்தில் உள்ளது.
அதை நாம் தரிசனம் செய்ய வேண்டும் என்றால்
நம் உணர்வு கடந்த நிலையில் தான் காண முடியும்.

ஆக அதன் அனுபவம் நமது மனத்தால் அறிய முடியாதது.
நாம் தூங்கி எழுந்த பின்னர் நாம் கண்ட கனவை ஞாபகப் படுத்தி
கனவில் கண்டவைகளை கூறுவது போல்
இந்த அனுபவத்தை கனவில் கண்டதை போல் ஞாபகப் படுத்தி
பார்த்தால்தான் நாம் பெற்ற அன்பவம் விளங்கும்.

மேலும் சிவத்தோடு ஜீவன் கலக்கின்ற நிலை
நான் என்கின்ற உணர்வு அற்றால்தான் கை கூடும்.
உணர்வு சிறிது தலை தூக்கினாலும்
அருள் தரிசனம் கை கூடாது.

ஆகவே ஜோதி தரிசனம் காண வேண்டும் என்கின்ற
உணர்வோடு தவம் செய்தால் நிச்சயமாக தரிசனம் கிடைக்காது.
அதற்காக தான் நமது வள்ளல் பெருமான்
இது நான் அனைத்தையும் விட்டதனால் வந்தது
என்று கூறினார்கள்.

உறும் உணர் உணவும் உணர்வெலாம் கடந்த
அனுபவமாகிய அருட்பெரும் ஜோதி.
அதுவே ஆன்மாவின் அனுபவம்.

அன்புடன்

விழித்திரு ஆறுமுக அரசு

No comments:

Post a Comment