அன்புள்ள சன்மார்க்க அன்பருக்கு,
நமது வள்ளல் பெருமானாரை புகைப்படம் பிடிக்க அன்பர்கள் சிலர்
பெருமானிடம் சம்மதம் கேட்டார்கள்.
ஆனால் பெருமானார் புகைப்படம் எடுப்பது
இறைவனுக்கு சம்மதம் இல்லை என்று மறுத்து விட்டார்கள்.
இருப்பினும் சில அன்பர்கள் பெருமானுக்கு தெரியாமல் ?
புகைப்படம் எடுக்க புகைப்படக் காரரை கூப்பிட்டு வந்து
புகைப்படம் எடுத்தார்கள். ஒரு முறை இரு முறை அல்ல
எட்டு முறை எடுத்தார்கள்.
ஆனால் பெருமானின் உருவம் பதிவாக வில்லை.
ஏன் புகைப்படம் பதிவாகவில்லை என்றால்
புகைப்படத்திற்கு தமிழில் நிழற் படம் என்றொரு பெயர் உண்டு.
சுத்த தேகம் பெற்றவர்கள் மாயை மற்றும் சாயை அற்றவர்கள்.
அதாவது அசுத்த மாயை மற்றும் சுத்த மாயை நீங்கப் பெற்றவர்கள்
மேலும் அவர்களது நிழல் கீழே விழாது. (சாயை என்றால் நிழல் என்று பொருள்)
நிழல் கீழே விழாதவர்களின் உருவம் நிழற் படத்தில் பதிவாகாது.
ஏனென்றால் அது நிழற் படம்.
நிழல் உள்ளவர்களுடைய உருவம் மட்டுமே
நிழற் படமாக பதியும்.
நிழல் அற்றவர்களின் உருவம் தோற்ற உருவமாக மட்டுமே
இருக்கும் அந்த உருவத்தில் வாளை எடுத்து சுழற்றினால்
வாள் உடலின் உள்ளே சென்று எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாமல்
வெளியே வரும். மேலும் இயற்கை சீற்றங்கள் அவரை ஒன்றும் செய்யாது.
மேலும் அவர்களுக்கு கால பேதம் கிடையாது.
கால பேதம் என்பது மூன்று காலங்களான
நேற்று, இன்று நாளை.
நேற்று என்பது முடிந்த ஒன்றாக நமக்கு இருக்கும்.
ஆனால் சுத்த தேகம் பெற்றவர்களால்
முடிந்த காரியத்தை மாற்றி அமைக்க முடியும்.
இனி நடக்க போகின்ற காரியத்தை முன்பே முடித்திருக்க முடியும்
நடந்து கொண்டிருக்கிற காரியத்தை எப்படி வேண்டுமானாலும்
மாற்றி அமைக்க முடியும்.
எப்படி என்றால்
கால தத்துவம் என்பது பூமியில் வாழும் நமக்கு ஒரு மாதிரியாகவும்
மற்ற கிரகங்களில் வாழ்பவர்களுக்கு வேறு மாதிரியாகவும் அமைந்துள்ளது.
காரணம் நமது பூமி சூரியனை சுற்றி வர 365 1/4 நாட்கள் ஆகிறது
அதுவே மற்ற கிரகங்கள் சூரியனை சுற்றி வர கால வேறுபாடு உள்ளது.
நாம் எல்லோரும் சூரிய குட்ம்பத்தில் வாழ்கிறோம்.
ஆனால் சுத்த, ஞான, பிரணவ தேகம் எடுத்தவர்
பிரபஞ்சங்களை தாண்டி அண்டங்களை தாண்டி போகக் கூடிய
நிலை பெற்ற காரணத்தால் அவர்களுக்கு கால பேதம் கிடையாது.
அன்புடன்
விழித்திரு ஆறுமுக அரசு
No comments:
Post a Comment