Sunday, April 11, 2010

அடுப்புக் கூட்டு எழுத்து

அன்பு நண்பர்களே,

ஆய்த எழுத்து அடுப்புக்கூடுபோல அமைந்திருப்பதால் இது "அடுப்புக் கூட்டு
எழுத்து" என்றும், மூன்று புள்ளிகளைக் கொண்டதால் "முப்பாற்புள்ளி" என்றும்
பழங்காலப் போரில் பயன்படுத்திய ஆய்தமான கேடயத்தின் மூன்று புள்ளிகளைப் போல்
உள்ளதால், இது "ஆய்த எழுத்து" என்றும், உயிர் எழுத்துக்கும் மெய்யெழுத்துக்கும்
நடுவில் தோன்றி, மொழியிடைச் சார்ந்து நடுவில் வந்ததால் "நடுவுவாங்கிய எழுத்து"
எனவும் பெயர் பெறும்.
அடுப்பு கூடு எழுத்து என்று சொன்னதற்கு காரணம் உண்டு
இது தெரிய வேண்டும் என்றால்
நாம் அவ்வையாரின் அகவலை நோக்க வேண்டும்.
அது
மூலாதாரத்து மூண்டு எழு கனலை
காலால் எழுப்பும் கருத்து அறிவித்து
என்கின்ற வரிகளின் பொருள் உணர்ந்தால்
அடுப்பு கூட்டு எழுத்து என்று ஏன் பெயர் வந்தது என்பதனை உணரலாம்.
இங்கே மூலாதாரம் என்றால் பதஞ்சலியின் யோக சூத்திரத்தை வைத்து பார்க்கும் போது
மூலாதாரம் என்பது நமது மல வாயிலுக்கு அருகில் இருப்பதாக கருதப்பட்டு வருகிறது.
ஆனால் சித்தர்கள் மூலாதாரம் என்பது புருவ மதியத்தில் உள்ளதாக
எடுத்துரைக்கிறார்கள்.
அதாவது மூன்றாவது கண் எனப்படுகின்ற நமது ஆன்மாவே
மூலாதாரம் எனப்படுகிறது.
அது கோடி சூரிய பிரகாசத்துடன் விளங்குகிறது.
இருப்பினும் அது அசுத்த மாயை என்னும் திரை மறைப்பில் உள்ளதால்
அது அக்னி என்னும் கனலாக உள்ளது
கனல் என்பது நெருப்பு அது ஜோதியாக மாற வேண்டும் என்றால்
இங்குதான் அடுப்பு கூட்டு எழுத்து என்ற பெயர் ஏன் வந்தது என்று உணரலாம்.
அடுப்பில் உள்ள கனலை கொழுந்து விட்டு எரிய செய்ய வேண்டும் என்றால் எனா
செய்வோம். ஊது குழ கொண்டு காற்றால் ஊதுவோம்.
மூலாதாரம் எனப்படும் நமது ஆன்மா மூண்டு எழு கனலாக கனன்று கொண்டு இருக்கிறது அதை
தீபமாக மாற்ற நாம் நமது மூச்சு காற்றை மேலே ஊதுவதன் மூலம் ஏற்றுகின்ற ரகசியம்
அறிந்தால் இறை தரிசனம் வாய்க்கும். இதைதான் சித்தர்கள் சாகா கல்வி என்று மறை
பொருளாக ரகசியமாக வைத்து இருந்தார்கள்.
இந்த ரகசியத்தின் வடிவாகதான் அடுப்பு கூட்டு எழுத்து என்று ஆயுத எழுத்தினை
படைத்தார்கள்.
தமிழில் எல்லா வார்த்தைகளுமே கூடுமான வரை காரண பெயராகத்தான் உள்ளது.
மற்றும் இடு குறி பெயர்களாக உள்ளது.
காரணம் தமிழ் ஆக்கிய சித்தர்கள்
காரண காரியம் ஆராய்ந்தே பெயர்களை சூட்டி இருக்கிறார்கள்.
அதுவும் இறைவனை காரிய காரணம் கடந்தவன் என்பதை காட்ட
இரண்டு கண்கள் காரியப்பட்டால் மனம் காரணப் படும்.
இந்த இரண்டையும் கடந்தால் மூன்றாவதான ஆன்மா காரியப்படும்.
இரண்டு புள்ளிகளுக்கு மேல் மூன்றாவதாக காரண காரியம் கடந்த ஆன்மாவை குறிக்கும்
விதத்தில் அமைத்தார்கள்.
மேலோட்டமாக பார்த்தால் சித்தர்களின் பாதை புரியாது.
மூலாதாரம் என்பது மலக்குடளுக்கு அருகில் இல்லை என்பதை
சுப்பிரமணியர் ஞானத்தில் மிக தெளிவாக எழுதி உள்ளார்.

அன்புடன்
சிவம்

1 comment:

  1. sivayam....

    sivam sir plz post ur articles to tamizh.hindu@gmail.com

    thanxx in advance

    படைப்புகளை அனுப்ப:http://www.tamilhindu.com

    இந்தத் தளத்தில் நீங்கள் எழுத விரும்பினால், தளத்தின் அறிமுகம் பகுதியில் கொடுத்துள்ள அடிப்படைகளுக்கேற்ப இருப்பது அவசியம்.

    படைப்புகள் அனுப்ப விரும்புவோர் யூனிகோட் அல்லது திஸ்கி தமிழ் எழுத்துருவில் எழுதி அனுப்பலாம்.

    உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி: tamizh.hindu[at]gmail.com

    படைப்புகளை வெளியிடுவது குறித்து ஆசிரியர் குழுவின் முடிவே இறுதியானது.

    படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே.

    ReplyDelete