Monday, May 3, 2010

கேள்வி - பதில் -1

1)வள்ளலாரின் பெருமை ஜீவகாருண்யத்தை மிகச்சிறந்த ஆன்மிக நெறியாக வலியுறுத்தியதில் இருக்கிறது.

ஜீவகாருண்யம் என்பது இறைவனை அடைவதற்கான பாதையாக இறை நிலை அனுபவம் வாய்த்த அனைத்து ஞானிகளுமே கூறி இருக்கிறார்கள். திருவள்ளுவர் கூட கொல்லாமை, புலால் மறுத்தல் போன்ற தலைப்புகளில் ஜீவ காருண்யத்தை வலியுறுத்தி உள்ளார்.
சரி ஜீவ காருன்யதிற்கும் இறை நிலையை அடைவதற்கும் என்ன தொடர்பு ?
ஜீவ காருண்யம் என்பதே பிற உயிர்களுக்கு எந்த துன்பமும் செய்யாமல் இருப்பதுதான்.
ஏன் பிற உயிர்களுக்கு துன்பம் செய்யக் கூடாது என்றால்
பிற உயிர்களுக்கு செய்யும் துன்பம் நமக்கு நாமே செய்து கொள்ளும் துன்பமாகும் என்கின்ற நீதி நெறியின் அடிப்படையிலாகும்.
இது எப்படி என்றால்
இறை அனுபவம் என்பதே எல்லா உயிர்களையும் தானாக காண்பதும்.
அடுத்து தன்னை தவிர வேறு ஒன்று இல்லை என்கின்ற நிலையினை அடைவதுதான்.
இப்படி பட்ட அனுபவம் வைத்தவர்கள் மட்டுமே இறை நிலையை அடைய முடியும்.
ஆகவேதான் பிற உயிர்கள் படுகின்ற துன்பம் அனைத்தும் தான் படுவதாக ஏற்படும் அனுபவம் இறை நிலையினை அடைவதற்கு முன்னர் ஏற்படும் அனுபவமாகும்.
மேலும் இந்த உயிர்கள் அனைத்தும் வினையின் காரணமாக அது நல் வினை, தீ வினை பிறப்பெடுத்து இருக்கின்றன. ஆனால் ஆதியில் இவை அனைத்தும் ஒன்றிலிருந்து பிரிந்து உடல் எடுத்து இருக்கின்றன.
ஆக நாம் அனைவரும் ஒன்றான சிவத்திலிருந்து (இங்கு சிவம் என்பது சிவன் அல்ல)
பிரிந்து வந்து இந்த உடலை வினையின் காரணமாக எடுத்து இருக்கிறோம்.
சரி வினை எப்படி தோற்றியது என்றால்
முதலில் சிவம் என்பது இயக்கமற்ற (Static) நிலையில் இருந்தது.
இயக்கமற்ற நிலையில் இருந்து சலனம் தோன்றியது.
அதுவே இயக்கமாக (Dynamic) மாறியது.
அந்த இயக்கத்தின் காரணமாக சுத்த மாயை தோன்றியது
அடுத்து அசுத்த மாயை தோன்றியது.
அதன் காரணமாய் பிறப்பு தோன்றியது.
பிறப்பின் காரணமாய் வினை தோன்றியது.
அது நல் வினை என்றும் தீ வினை என்றும்
மீண்டும் மீண்டும் பிறப்பதற்கு காரணமாய் ஆனது.
இங்கே பிறப்பறுக்க வேண்டும் என்றால்
நாம் நல் வினை மற்றும் தீ வினையில் இருந்து விடு பட வேண்டும்.
அதற்கு பெயர்தான் நிர்மல நிலை அதாவது அசுத்த மாயையில் இருந்து
சுத்த மாயை நிலைக்கு உயர்தல்.
அந்த நிலையினை அடைய நமக்கு துணை செய்வதுதான்
ஜீவகாருண்யம்.

No comments:

Post a Comment